பல்லினக்
குருவிகளின்
நந்தவனமே
நம்பிக்கை
நல்லுறவே
விழிகளான எழிலே
காதலாகிக் கசியும்
அதிகாலைக் குயிலே
அவ்வப்போது மழையே
விளைச்சலாய்ப் போற்றும்
வீழாத நேர்மையே
கைதட்டும்
கடல்வெளியே
கார்முகிலே
கொடையே
அருளே
கடந்துவந்த
வலி மறைத்து
நுரையாய்ச் சிரிக்கும்
நதியே
கடவுச்சீட்டில்
சாதனை எழுதும்
சரித்திரமே
இன்று உன் பிறந்தநாள்
பொலிவு மாறாத
புன்னகை மாறாத
பூவுலகின் புது நிலவே
வாழ்த்து மழை தூவும்
வசந்தமே
வானமே
வாழ்க நீ இந்த
வையம் உள்ளவரை
அமீதாம்மாள்


