ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி விழா
ஏகாந்தமாய் சிங்கை முழுவதும்
அன்னை தமிழின் வீதி உலா
அன்னை தமிழுக்கு அன்பு கரம் நீட்டிய உனக்கு நடத்த வேண்டும் திரு விழா
உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரியன் என்றாலும்
சிங்கை உலகிற்கு ஒளியை மட்டுமல்ல நம்பி வந்தோருக்கு வாழ்வையும் வாரி வழங்கிய இரண்டாவது ஆதவன்
முப்பதே ஆண்டுகளில் மூலகையும் திரும்பி பார்க்க வைத்த முடி சூடா மன்னன்
அவரே நமக்கு வாழ்வு அளித்த
எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட முதல்வன்
காரிருளில் தோன்றிய மின்னல் கீற்று
கான மழையில் தோன்றிய ஊற்று
நம்பிக்கை நட்சத்திரமாய் தோன்றிய நாற்று
நாளை நமதே என்பதற்கு சான்று
சாலையையும் சோலையாய் மாற்றிய வீரன்
சரித்திரத்தையும் திருப்பி பார்க்கே வைத்த சூரன்
சாமானியர்களையும் சாதனை படைக்க வைத்த மாறன்
சொர்க்கத்தையே பூமியில்
பூமியில் உருவாக்கிய சேரன்
சிங்கை தீவிற்கு ஒளி கொடுத்த இரண்டாவது ஆதவன்
சிங்கை என்னும் உலகத்தை உருவாக்கிய ஆண்டவன்
அக்கினி குஞ்சு பிழம்பு
இன்று எல்லோர் மனதிலும் அணையா தீக்குழம்பு
வேதனையை சாதனையாக மாற்றிய மா மேதை
வேற்று கிரகமும் உன் வெற்றி கண்டும் தொடரும் உன் பாதை
நீ அடையவில்லை ஒருபோதும் தளர்ச்சி
ஒன்பது கோளும் உன்னக்கு பார்த்து அடையும் மகிழ்ச்சி
நீதி வழங்குவதில் நீ மனுநீதி சோழன்
நிம்மதியை தேடி வருவோருக்கு கரம் கொடும் தோழன்
பீனிக்ஸ் பறவையாய் உந்தன் மறு பிறப்பு
பிழைப்பு தேடி வருவோருக்கு இங்கு தனி மதிப்பு
சந்திரனும் உன்னை பார்த்து
அடையும் வியப்பு
உனக்கு கிடையாது ஒரு போதும் இறப்பு
நீ இந்த உலகில் தனி பிறப்பு
காசிநாதன் சுதா


