பகைமை இல்லாத நாடு
பசி தீர்க்கும் பசுங்காடு
அங்கமதை தங்கமாய்
அடைகாக்கும் தேன்கூடு
பலமொழி பேசும் தேசம்
பட்டொளி எங்கும் வீசும்
வியர்வைத் துளி வாசம்
விண் அளந்து பேசும்
தூய்மை வளம் மேயும்
வாய்மை நலம் தாயும்
வானம் வளைந்து சாயும்
கடமை மனதுள் பாயும்
சிங்கையின் அலங்காரம்
உழைப்பின் கலாசாரம்
பட்டாசுகள் வெடிச் சத்தம்
பாட்டாளிகள் மனம் சுத்தம்
துன்பம் இளைத்து உருகும்
இன்பம் மலைத்து பருகும்
இனிய இன்பம் பிறக்கும்
துணிய துன்பம் இறக்கும்
விவேகம் வேகம் தேடும்
மனத்தில் உறுதி ஆடும்
சொந்தம் ஒன்றாய் கூடும்
வசந்தம் கன்றாய் நாடும்
குடும்பம் நன்றாய் கூடி
குதூகலிக்கும் பெருவிழா
தேசிய உணர்வை உயரே
உயர்த்தி மகிழும் திருவிழா
வறுமைக்கு வழியில்லை
அழைப்புக்கு அமுத விழா
வளமைக்கு அழிவில்லை
உழைப்புக்கு வசந்த விழா
பூவிலங்கையான்


