வரவேற்போம் தேசியத்தின் நாளை

வரவேற்போம் தேசியத்தின் நாளை

1 mins read
a2ce5c05-c2f8-4f85-840e-6ac26a89d488
-
Google News Preferred Icon

நான்கின நல்லிணக்க கூட்டாட்சிக் கொண்டு

நல்லதோர் தூய்மையான நல்லாட்சி பெற்று

வான்புகழ் பெருமையினை பெற்றுவிட்ட தாலே

வாழ்த்தி வரவேற்போம் தேசியத்தின் நாளை

எத்துணை வளமுமின்றி மனிதவளம் ஒன்றால்

ஏற்றம் கண்டுவிட்ட எழுச்சிமிக்க நாடு

நித்திரை பாராது நாடுயர உழைத்த

நல்லதோர் முன்னோடி பெற்றெடுத்த பேறு

புத்துணர்வும் புதுமையும் தொய்வின்றி பெற்று

பொலிவுடன், சிங்கப்பூர் பல்லாண்டு வாழு

எத்தனை இன்னல்கள் வந்திடினும் ஏற்று

அத்தனை இடர்களையும் வென்றுயர்வோம் நாமே!

கி. சுப்பிரமணியம்

குறிப்புச் சொற்கள்
கவிதைதேசிய நாள் கவிதைகள்தேசிய தினம் 2026