மரபைக் கைவிடேல்!

மரபைக் கைவிடேல்!

1 mins read
b73ddb05-2ba0-4dbd-93ec-c917f1df4219
-
Google News Preferred Icon

எத்தனையோ சிந்தனைகள் எண்ணத்தில் தோன்றிடினும்

அத்தனையும் பாக்களென ஆவதில்லை - வித்தொன்று

உள்ளத்தில் வேரூன்றி ஆலமாய் வளர்ந்து

துள்ளி வரவேண்டும் சீர்

தொடையற்ற பாட்டு தொடரின்றி முற்றும்

நடையற்றுப் போகும் நலிந்து - தடையின்றி

யாப்பின் இலக்கணத்தை யாண்டும் பயின்றிட

நாப்பழக்க மாகும் நிலைத்து

புதுக்கவிதை என்றே பொதுவாகக் கூறி

எதுவும் எழுதலாம் என்றில் - அதுவே

உரைநடை போல உருவாகிப் போயின்

நிறைவாக வாராது நன்று

இலக்கணக் கட்டுக்குள் சிக்காது தீட்டும்

பலவகைப் பாவலர் பாட்டும் - நலமாய்

உவமைகள் தாங்கி உடன்வரும் போது

கவர்ந்திடும் படித்திடக் காண்