அன்பெனப்படுவது

அன்பெனப்படுவது

1 mins read
1b572e07-6572-4a10-b18b-f090723839f3
Google News Preferred Icon

காலையில் லிப்டை பிடித்து நின்றவரிடம்

நன்றி என்றேன்

பிறகு பேருந்தில் இடம்விட்டு அமர்ந்தவருக்கு

கடையில் நேநீர் தந்தவருக்கு

மின்னஞ்சலுக்கு பதில் போட்டவருக்கு

நான் திரும்பும்வரை விழித்திருந்த அம்மாவுக்கு…

நன்றியை இன்னும் சில சொல்லும் புன்னகையும்

சேர்த்துச்சொன்னபோது

கதவு, சன்னல், சோபா, கட்டில்

எல்லாமும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தன

லதா

குறிப்புச் சொற்கள்
லதாகவிதைஞாயிறு முரசு