சிறைப்பட்ட விசுவாசம்

சிறைப்பட்ட விசுவாசம்

1 mins read
611feda5-0079-4f0e-ba57-11fcc1e781ad

எல்லா உயிரும் சுதந்திரமாய் வாழவே பூமி!

‘செல்லப்பிராணி’ என்ற பெயரில்!

நாய்களைச் சிறை வைப்பது என்ன நியாயம்?

கொலை என்பது... கத்தியால் மட்டும் குத்துவது மட்டுமல்ல,

கழுத்தில் சங்கிலி மாட்டி – அன்பென்ற பெயரில்

அடிமையாக்கி ‘நடைப்பயணம்’ கூட்டிப் போவது கூடத்தான்!

உனக்கு பிடித்த தயிர்ச்சாதத்தை ஊட்டிவிட்டு,

அதன் நிஜ பசி என்னவென்று ...இன்னும் தெரியாமல்!

நொந்து, வழியின்றி!

நாய் என்றும் நன்றியுள்ள விலங்குதான்...

அதைச் சிறைப்பிடித்த நாம் என்னவோ?...

அய்யா புவன்

குறிப்புச் சொற்கள்
அய்யா புவன்கவிதைகதை/கவிதைஞாயிறு முரசு