விடியும்

விடியும்

1 mins read
75e1ef50-f3df-46da-87bf-47fdd16929f0

உன்னால் முடியும்

உன்னால் முடியும்

நினைத்தே நீயும்

வாழு!

தன்னால் விடியும்

தன்னால் விடியும்

வாழும் நினைப்பு

பாழு!

முடியாது

முடியாதெனும்

வாழ்க்கை என்றும்

விடியாது!

முயற்சியில் மூழ்கி

வறட்சியை துறத்து

வறுமை என்றும்

தொடராது!

உனக்குள் இருக்கு

உந்தன் வாழ்வு

ஒளிந்து நலிந்து

கிடக்காதே!

விடியல் தோறும்

வெற்றி உனக்காய்

முளைந்து விளைந்து

கடக்காதே!

தன்னம்பிக்கை

தருகிற சக்தி

தாய்பால் போல

உனக்கு!

உனக்கென கிடைத்த

உன்னத வாழ்வு

உந்தன் கைகளில்

இருக்கு!

தனக்கே தனக்கே

என்னும் எண்ணம்

முழுதும் நீயும்

முடக்கு!

உனக்கே உனக்கென

ஒவ்வொரு நாளும்

உனக்காய்

காத்துக் கிடக்கு!

எளிதென நினைத்து

ஏறத் தொடங்கு

இமயத்தை அடைய

முடியும்!

எரிமலை குழம்பில்

குளித்து களித்து

உதயத்தை கடைய

விடியும்!

பூவிலங்கையான்

குறிப்புச் சொற்கள்
கதைகவிதைஞாயிறு முரசு

தொடர்புடைய செய்திகள்