விடுதலை

விடுதலை

fallback-0

20 Sep 2026 - 6:30 am

1 mins read

மகள் ஒரு கிளி வளர்த்தாள்.

ஒருநாள் கூண்டின் கதவுகளைத்

திறந்து வைத்தேன்.

சிறகடித்துப் பறந்தது கிளி.

கோபமில்லாமல்தான்

கேட்டாள் மகள் ...

அப்பா ...

கிளிக்கு விடுதலை

கொடுத்து விட்டாயா?

இல்லையம்மா ...

கிளியிடமிருந்து

இந்தக் கூண்டிற்கு

விடுதலை வாங்கித் தர

எனக்கு வேறு வழிகள் தெரியவில்லை!

பாலு மணிமாறன்

குறிப்புச் சொற்கள்