புகைமூட்டம்

புகைமூட்டம்

fallback-0

18 Oct 2026 - 6:00 am

1 mins read

சென்றுவிட்ட புகையே

திரும்ப ஏன் வந்தாய்?

இங்கே

பொது வெளியில்

புகைவது குற்றம்

தேன் மழையை

தென்றலை

தெவிட்டத் தெவிட்ட

அள்ளிவரும்

தென்மேற்குக் காற்றே

புகையைக் கழுவிவிட்டு

புனிதமாய் வா

ஓ புகையே

உன் காற்றுக் காதலன்

கடல்வெளியில் காத்திருக்க

இங்கு ஏன் வந்தாய்

ம். போ

அவனைக் கூடிவிடு

அவனோடு கரைந்து விடு

வாழ்த்துகிறோம் உன்னை

விலகிவிடு

எங்களை விட்டுவிடு

அமீதாம்மாள்

குறிப்புச் சொற்கள்
கதைகவிதையூசுப் ராவுத்தர் ரஜித்

தொடர்புடைய செய்திகள்