விதியோடு போராடும் வாழ்வின் பயணம்
மதியின் துணையின்றி வெல்லா - கதியற்று
போனதாய் உள்ளம் பணிந்திடின், மீளவும்
தானாக முந்தும் விதி
முதலின்றி வாணிகம் மேற்கொள்ள எண்ணி
நிதமும் கனவுலகில் நீந்தி - எதிலும்
முயலாத மாந்தர், முடிவில் விதியின்
பயனென கூறுவர் பார்
எல்லாம் விதிவகுத்த தென்று ஒதுங்குவோர்
செல்லும் வழியெங்கும் சோர்வுற்று - வெல்லும்
திடமின்றி தாழ்வின் துயரத்தில் மூழ்கி
சடமாய் கிடத்தல் துயர்
கி.சுப்பிரமணியம்
