தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊடுருவல்காரர்களை விரட்டியடிப்போம்: பீகாரில் அமித்ஷா பேச்சு

1 mins read
0f3ec478-8e39-429b-a1e2-038a9ee671e1
பீகாரில் வளர்ச்சிக்கான ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் அமித்ஷா அந்த மாநில மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். - படம்: ஊடகம்

பாட்னா: பீகாருக்குள் ஊடுருவியவர்கள் தொடர்ந்து அங்கேயே வாழ வேண்டும் என்று ராகுல் காந்தி பேரணிகளை நடத்திப் பிரசாரம் செய்து வருகிறார் என்று அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார்.

பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்ததும், ஊடுருவல்காரர்களை வெளியேற்றும் பணி துரிதப்படுத்தப்படும் என்றார் அவர்.

“பீகார், காட்டாட்சியில் இருந்து விலகி இருக்கவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு வலுவாக இருக்கவும், நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் பாதுகாப்பாக இருக்கவும், எதிர்காலத்தில் பீகார் வளர்ச்சியடைந்த மாநிலமாகத் திகழவும் கடவுளை நான் பிரார்த்திக்கிறேன்.

:இந்தத் தேர்தல், சட்டமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் அல்லது முதல்வரையோ தேர்ந்தெடுப்பது பற்றியது அல்ல.

“இந்தத் தேர்தல் காட்டாட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டுமா அல்லது வளர்ச்சிக்கான ஆட்சியைக் கொண்டுவர வேண்டுமா என்பது பற்றியது.

“நிதிஷ் குமார் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் மாநிலத்தில் காட்டாட்சியில் இருந்து விடுவித்துள்ளது. குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் சலுகைகளை அளிக்கும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டது.

“லாலு பிரசாத் - ராப்ரி தேவி தலைமையிலான ஆட்சியில், காட்டாட்சி மட்டுமே நடக்கும். அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தால், பீகார் வளர்ச்சி பெற்று அதன் புகழ், நாடு முழுவதும் பரவும்,” என்று அமித்ஷா பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்