கூர்மையான முட்களுக்காக முள்ளம்பன்றிகள் அதிகம் அறியப்பட்டாலும், அவற்றில் பல்வேறு வகைகளும் உள்ளன.
வித்தியாசமான முகடு கொண்டுள்ள முள்ளம்பன்றிகள், குறிப்பாக, மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை. ஆனால் நன்கு பழகிவிட்டால், மற்றவர்கள் தங்களைத் தொட அனுமதிக்கும் தன்மை உடையவை.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் ‘தண்டர்’ என்ற முள்ளம்பன்றியைப் பொதுமக்கள் இப்போது மிக அருகிலிருந்து பார்க்கலாம்.
‘ஹெல்லோ ஃப்ரம் தி வைல்ட்’ ஊடாடும் அங்கத்தின் வழி முள்ளம்பன்றிகளுக்கு உணவளித்து, அவற்றைத் தொட்டுப் பார்த்து அவற்றைப் பற்றி மேலும் சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
விலங்குடன் பழகும் நேரம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடிக்கும். 18 வயதுக்குட்பட்ட பங்கேற்பாளர்கள் எல்லா நேரங்களிலும் ஒரு பெரியவரின் துணையோடு இருக்க வேண்டும்.
இந்த அங்கம் ஒவ்வொரு புதன், வெள்ளிக்கிழமைகளிலும் பிற்பகல் 3.15 மணி முதல் 3.35 மணி வரை 20 நிமிடங்களுக்கு நடைபெறும்.
பொதுமக்களுக்கு, ஒரு நபருக்கான பங்கேற்புக் கட்டணம் $53.
‘வைல்ட்பாஸ்’ வைத்திருப்பவர்களுக்குக் கட்டணம் $47.70. ‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் மண்டாய்’ உறுப்பினர்களுக்கு $42.40.
இக்கட்டணங்களில் விலங்கியல் தோட்டத்துக்கான நுழைவுச்சீட்டுகள் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மூடிய காலணிகளைப் பங்கேற்பாளர்கள் அணிவது கட்டாயமாகும்.
‘ஹெல்லோ ஃப்ரம் தி வைல்ட்’ நடவடிக்கையின் மற்ற பதிப்புகளில், முள்ளம்பன்றிகள் மட்டுமன்றி, கேபிபாரா, ஃபென்னெக் நரிகள், ஸ்கங்குகள், வாலபி ஆகிய இதர விலங்குகளைப் பார்வையாளர்கள் அருகில் சென்று கண்டு களிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.mandai.com/en/see-and-do/hello-from-the-wild.html என்ற இணையப்பக்கத்தைப் பொதுமக்கள் நாடலாம்.
