சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் திகிலூட்டும் ஆய்வகம், மின்னும் உயிரினம்

சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் திகிலூட்டும் ஆய்வகம், மின்னும் உயிரினம்

படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்

12 Oct 2026 - 12:05 pm

2 mins read

ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு புதிய, விசித்திரமான அறிவியல் அனுபவங்களைச் சிங்கப்பூர் அறிவியல் நிலையம் வழங்கவுள்ளது.

அங்கு அக்டோபர் 27 முதல் நவம்பர் 1 வரை ‘ஸ்பூக்காலஜி’ என்ற பெயரில் ஹாலோவீன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதில், ரகசிய ஆய்வகத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்று தோல்வியில் முடிந்ததன் காரணங்களைப் பார்வையாளர்கள் கண்டறிவர்.

ஆதாரங்களைத் திரட்டுவதற்காக அவர்கள் சமூக அறிவியல் விசாரணை அதிகாரிகளாகச் செயல்படுவர்.

நான்கு திகில் ஆய்வகங்களைத் தாண்டி, இறுதியில் ஒரு பிரம்மாண்டமான இயந்திர சிலந்தியை எதிர்கொள்ளும் மூன்று நிமிட சவாலும் அவர்களுக்குக் காத்திருக்கிறது.

மேலும், அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் ‘ஸ்பூக்காலஜி: இரவில்’ என்ற இரவு நேர சிறப்பு நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிகள், இயந்திர மனிதர்களின் சுவாரசியமான செயல்பாடுகள் ஆகியவை இடம்பெறும்.

நவம்பர் 3 முதல் ‘புளூமிங் ஓஷன்ஸ்’ என்ற ஆசியாவின் முதல் நேரடி உயிரியல் ஒளிர்வு கண்காட்சி தொடங்குகிறது.

உயிரியல் ஒளிர்வு என்றால் உயிரினங்களால் வெளியிடப்படும் ஒளியாகும்.

அக்டோபர் 27 முதல் நவம்பர் 1 வரை ‘ஸ்பூக்காலஜி’ என்ற பெயரில் ஹாலோவீன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அக்டோபர் 27 முதல் நவம்பர் 1 வரை ‘ஸ்பூக்காலஜி’ என்ற பெயரில் ஹாலோவீன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. - படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்

அக்கண்காட்சியில் பார்வையாளர்கள் நீல நிறத்தில் ஒளிரும் ‘டைனோஃப்ளகெலேட்ஸ்’ (dinoflagellates) எனப்படும் நுண்ணுயிரிகள் வாழும் செயற்கை ஏரியில் இறங்கி நடக்கும் சிறப்பான அனுபவத்தைப் பெறலாம்.

நமது அசைவுகளுக்கு ஏற்ப இந்த உயிரினங்கள் நீரில் நீல நிற ஒளியை வெளியிடும்.

இதுதவிர, பிரபல ஒட்டுவில்லை கதாபாத்திரமான ‘கியூபி’ (Quby) தனது 10வது பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் நிலையத்துடன் இணைந்து ஐந்து சிறப்புப் பொம்மைகளை (Plushies) அக்டோபர் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது.

சிறார்களுக்காக ‘ஸ்பூக்காலஜி ஜூனியர்ஸ்’, ‘சைன்ஸ் கஃபே’ போன்ற சிறப்பு அங்கங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 ‘கியூபி’ (Quby) தனது 10வது பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் நிலையத்துடன் இணைந்து ஐந்து சிறப்புப் பொம்மைகளை வெளியிடுகிறது.
 ‘கியூபி’ (Quby) தனது 10வது பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் நிலையத்துடன் இணைந்து ஐந்து சிறப்புப் பொம்மைகளை வெளியிடுகிறது. - படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்

அறிவியல் கற்றலை சுவாரசியமாகவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் மாற்றுவதே அந்நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கம் என அறிவியல் நிலையத்தின் தலைமை நிர்வாகி தாம் முன் சீ தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
அறிவியல்ஆய்வகம்அனுபவம்சிறார்