பூன் லே கார்டன் தொடக்கப்பள்ளியில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம்

பூன் லே கார்டன் தொடக்கப்பள்ளியில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம்

படம்: செயற்கை நுண்ணறிவு

23 Nov 2026 - 5:45 am

1 mins read

​தீபாவளி என்பது நமது பூன் லே கார்டன் தொடக்கப்பள்ளி ஒளிமயமான விளக்குகளும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களும் நிறைந்ததாக மாறும் ஒரு அற்புதமான காலமாகும்.

அந்தச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடுவதற்காக மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து பள்ளியின் தாழ்வாரங்களை ஒளிரும் விளக்குகள், வண்ணமயமான கோலங்கள் ஆகியவற்றால் அழகாக அலங்கரித்தனர்.

​நமது பள்ளியில் நடந்த தீபாவளி விழாவின்போது, மாணவர்கள் மிகவும் உற்சாகமாக இரண்டு பாரம்பரிய நடனங்களை ஆடினர்.

அதில், குச்சிகளைப் பிடித்துத் தட்டி அழகாகக் கோலாட்டத்தையும் கைக்குட்டைகளைப் பயன்படுத்தி இசைக்கேற்ப அழகாக அசைத்து ஆடும் ஒயிலாட்டத்தையும் மாணவர்கள் மேடையேற்றினர்.

அந்த நடன நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, பள்ளிக்கு வந்த சிறப்புக் குழுவினர் நாடக நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அந்த நாடகம் மிகவும் அற்புதமாக இருந்ததுடன், அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

அதுமட்டுமன்றி, அவர்கள் பிள்ளைகளுக்கான விளையாட்டுகளையும் ஏற்பாடு செய்தனர். நமது பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஒளித் திருநாளைக் கொண்டாடிய அந்த நாள் எனக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

அதன்யா, தொடக்கநிலை 4
 பூன் லே கார்டன் தொடக்கப்பள்ளி
அதன்யா, தொடக்கநிலை 4 பூன் லே கார்டன் தொடக்கப்பள்ளி - படம்: பூன் லே கார்டன் தொடக்கப்பள்ளி
குறிப்புச் சொற்கள்
தீபாவளிகொண்டாட்டம்பள்ளிமாணவர்