கட்டுரையைச் சிறப்பாக எழுதக் கற்றுக்கொண்ட மாணவர்கள்

கட்டுரையைச் சிறப்பாக எழுதக் கற்றுக்கொண்ட மாணவர்கள்

படம்: ‘இளந்தளிர்’ அமைப்பு

12 Oct 2026 - 2:17 pm

1 mins read

மாணவர்கள் தமிழில் சிறப்பாக கதைகளையும் கட்டுரைகளையும் எழுத வேண்டும் என்பதற்காக, ‘இளந்தளிர் தமிழ்க் கழகம் சிங்கப்பூர்’ என்ற அமைப்பு, சிறப்புப் பயிலரங்கு ஒன்றை அண்மையில் நடத்தியது. 

விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகக் கட்டடத்தில் அது நடைபெற்றது. 

தொடக்கநிலை 3, 4 மாணவர்களுக்கான வகுப்பில் ஏறக்குறைய 80 சுட்டி நண்பர்கள் கலந்துகொண்டனர்.

விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகக் கட்டடத்தில்  பயிலரங்கு நடைபெற்றது. 
விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகக் கட்டடத்தில் பயிலரங்கு நடைபெற்றது.  - படம்: ‘இளந்தளிர்’ அமைப்பு

பயமே இல்லாமல், மனத்தில் தோன்றும் அருமையான கற்பனை எண்ணங்களை எளிய முறையில் தமிழில் கட்டுரையாக எழுதுவது எப்படி என்று அவர்கள் மகிழ்ச்சியோடு கற்றுக்கொண்டனர்.

அதேபோல, தொடக்கநிலை 5, 6 மாணவர்களுக்கான வகுப்பில், கட்டுரையை மாறுபட்டதாகத் தொடங்குவது எப்படி, வாக்கியங்களை அழகாக அமைப்பது எப்படி, பொருத்தமான திருக்குறளையும் பழமொழியையும் பயன்படுத்தி கருத்துடன் நிறைவு செய்வது எப்படி போன்ற உத்திகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

தமிழ் பாடப்புத்தகத்திற்கு மட்டுமன்றி கற்பனைக்குச் சிறகு கொடுக்கும் இனிமையான மொழி என்பதைப் புரிந்துகொண்ட மாணவர்கள், இனித் தமிழில் நிறைய கதைகளும் கட்டுரைகளும் எழுதப் போவதாகச் சொல்லி உற்சாகமடைந்தனர்.

“தமிழில் எழுதுவதில் மாணவர்களுக்கு இருந்த தயக்கத்தைப் போக்கி, தங்களுடைய எண்ணங்களையும் கற்பனைகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான நம்பிக்கையை வளர்ப்பதே பயிலரங்கின் முக்கிய நோக்கமாக இருந்தது,” என்று  இதனை நடத்திய திருவாட்டி நபிலா நஸ்ரின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்