முழுமையான சுய மேம்பாட்டுக்குக் கைகொடுக்கும் இணைப்பாட நடவடிக்கைகள்

முழுமையான சுய மேம்பாட்டுக்குக் கைகொடுக்கும் இணைப்பாட நடவடிக்கைகள்

2 mins read
2a713842-47ea-4439-ae79-e87fcab939b3
-

இந்த ஆண்டு உயர்நிலை ஒன்றில் பயிலும் சரண்ராஜ் வேல்ராஜ் பள்ளியில் சேர்ந்ததுமே இணைப்பாட நடவடிக்கையாகச் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்வது என்று திட்டவட்டமாக முடிவெடுத்திருந்தார்.

-

தமது மூத்த சகோதரர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நிலை ஒன்றில் சேர்ந்தபோது இணைப்பாட நடவடிக்கைகள் குறித்து வீட்டில் பெற்றோர்களுடன் நடந்த கலந்துரையாடலைக் கவனித்த சரண்ராஜ், அந்த ஆலோசனைகளை நினைவுகூர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

இணைப்பாட நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்கும்போது முக்கியமாக எந்தெந்த அம்சங்களில் ஆர்வம் உள்ளது என்பதை முதலில் ஆராயவேண்டும் என்பதில் சரண்ராஜ் கவனமாக இருந்தார்.

-

தொடர்ந்து நான்காண்டுகள் அந்த இணைப்பாட நடவடிக்கையில் துடிப்பாகச் செயற்பட முடியுமா என்றும் அந்த நடவடிக்கையில் ஈடுபடுவதன் வாயிலாக என்னென்ன திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதையும் ஆராயவேண்டும் என்றும் தமது பெற்றோர் வலியுறுத்தியது அவருக்கு ஆணித்தரமாக மனத்தில் பதிந்துள்ளது. "மற்றவர்களுக்கு உதவுவது எனக்கு இயல்பாகவே தோன்றும் குணம். அதனால், எனது விருப்பத்தை மேலும் வளர்த்துக்கொள்ளச்செஞ்சிலுவைச் சங்கமே சிறந்த தளம் என்று நான் முடிவெடுத்தேன்," என்றார் சரண்ராஜ்.

-

கிட்டத்தட்ட மூன்று நாள்களில் இந்த முடிவை எடுத்த சரண்ராஜ், தமது சகோதரர் முடிவெடுக்கப் பல வாரங்கள் எடுத்துக்கொண்டார் என்பதையும் சுட்டிக்காட்டினார். "என்னைப் போன்றே உயர்நிலை ஒன்றுக்கு வரும் எல்லா மாணவர்களும் தங்களுக்கு ஏற்ற இணைப்பாட நடவடிக்கையை நன்கு சிந்தித்துத் தேர்ந்தெடுப்பது சிறப்பு," என்று கூறினார்.

-

அவர் இணைப்பபாட நடவடிக்கைகள் மாணவர்களின் முழுமையான சுய மேம்பாட்டுக்கு அவசியமானவை. பள்ளிக்கூடங்களில் ஏட்டுக்கல்வியைக் கற்று மேம்படுத்திக்கொள்வது மட்டும் மாணவர்களின் நோக்கம் அல்ல.

நல்ல பண்புநலன்களைப் பேணவும் பொறுப்புணர்வு வளரவும் சிந்தனையில் வளர்ச்சிப் பெறவும் இணைப்பாட நடவடிக்கைகள் மாணவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. அனைவருமே தங்களுக்கு விருப்பமான துணைப்பாட நடவடிக்கையில் சேர்ந்து பலன்பெறவேண்டும்.