சிறார்களைச் சுண்டியிழுக்கும் உயிரோவியங்களுடன் 'கதை நேரம்'

சிறார்களைச் சுண்டியிழுக்கும் உயிரோவியங்களுடன் 'கதை நேரம்'

3 mins read
53259459-1661-4fa0-b616-a3f55057766c
'கதை நேரம்' வலைத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு சிறுவர் கதை இடம்பெறும். (உள்படம்) மனைவி, மகனுடன் திரு ஜெகன்னாத் . படங்கள்: இணையம் -

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

குழந்­தை­க­ளுக்கு நன்­னெ­றிப்­பண்­பு­களும் புதிய வார்த்­தை­களும் கற்­றுக் கொடுத்து, அவர்­க­ளின் சிந்­த­னைத் திறனை வளர்த்து, தமிழ் மொழி மேல் உள்ள ஆர்­வத்­தைக் கூட்­டு­வதே 'கதை நேரம்' எனும் புத்­தாக்க முயற்­சி­யின் நோக்­க­மா­கும். இம்­மா­தம் நடை­பெ­றும் தமிழ் மொழி விழா­வின் நிகழ்ச்­சி­களில் 'கிரி­யேட்­டிவ் ஹேண்ட்ஸ்' உரு­வாக்­கிய 'கதை நேரம்' என்­னும் வலைத்­த­ள­மும் ஒன்று.

உயி­ரோ­வி­யம் (அனி­மே­ஷன்) மூலம் உள்­ளூர் எழுத்­தா­ளர்­க­ளின் கதை­க­ளுக்கு உயி­ரூட்­டு­வ­தும் ஊட­கங்­க­ளுக்­குக் குழந்­தை­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தும் இதன் தனித்­து­வம்.

தமிழ் மொழி விழா­விற்­காக உரு­வாக்­கப்­பட்ட இவ்­வ­லைத்­த­ளம், குழந்­தை­க­ளின் கதை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்து அக்­க­தை­க­ளைச் சித்­தி­ரித்து வரு­கிறது.

அவ்­வ­கை­யில் ஒரு வாரத்­தில் நான்கு கதை­கள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. முதல் கதை­யான 'அன்­பான அ' ஏப்­ரல் 4ஆம் தேதி வெளி­யி­டப்­பட்­டது. இக்­க­தையை எழு­தி­ய­வர் திரு­மதி தேவி விஜ­யன். இதைத் தொடர்ந்து 'நட்­பின் அடை­யா­ளம்' ஏப்­ரல் 11 அன்­றும் 'வண்­ணப்­பெண்' ஏப்­ரல் 18 அன்­றும் 'பிஞ்­சு­மிட்­டாய்' ஏப்­ரல் 25 அன்­றும் வெளி­யி­டப்­படும். இவை வெவ்­வேறு உள்­ளூர் தமிழ் எழுத்­தா­ளர்­க­ளால் எழு­தப்­பட்­டவை.

http://www.kathaineram.com/ எனும் இணை­யத்­த­ளம் மூலம் அந்­தக் கதை­க­ளைக் காண­லாம்.

'கிரி­யேட்­டிவ் ஹேண்ட்ஸ்' அமைப்­பின் நிறு­வ­ன­ரான 32 வயது ஜெகன்­னாத் ராமா­னு­ஜம் உயி­ரோ­விய (அனி­மே­ஷன்) கலைஞராவார். அவ­ரது 'தி ஹேண்ட்' உயி­ரோ­வி­யப் படம், 2014ஆம் ஆண்டு ஹாங்­காங் அனைத்­து­லக கைபே­சித் திரைப்­ப­ட­வி­ழா­வில் வெண்­க­லப் பரி­சைப் பெற்­ற­தோடு 2013ல் சிங்­கப்­பூர் குறும்­பட விழா­வில் பரிசு பெற நிய­ம­னம் பெற்­றது. இது போன்ற விழாக்­களில் தமிழ் வழி கதை­களோ குறும்­ப­டங்­களோ அதி­கம் இல்­லா­த­தால், அவை வேண்­டும் என்ற ஏக்­கம் திரு ஜெகன்­னாத்­தி­டம் பல ஆண்­டு­க­ளா­கவே இருந்து வந்­தது. தமிழ் மொழி விழா அவ­ரது இவ்­வி­ருப்­பத்தை நிறை­வேற்ற ஒரு நல்ல தளத்தை அமைத்­துத் தந்­த­தாக அவர் கூறி­னார்.

குழந்­தை­க­ளுக்­கான உயி­ரோ­வி­யங்­களை உரு­வாக்க என்ன கார­ணம் என்று கேட்­ட­போது, "கதை நேரம் மூலம் பகிர்ந்து ெகாள்ளும் அம்­சத்தை அறி­மு­கப்­ப­டுத்­து­வதே எங்­கள் முயற்சி. இந்த யோசனை வந்­த­தன் கார­ணம் என் குழந்­தை­கள்­தான். அவர்­க­ளி­டம் இரவு நேரத்­தில் கதை­கள் படிக்­கும்­போது அவர்­கள் நிறைய கேள்­வி­கள் கேட்­பார்­கள். குழந்­தை­கள் எழுப்­பும் இது­போன்ற கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்க ஊடா­டும் ஊட­கம் உத­வும் என்று நான் உணர்ந்­தேன்," என்­றார்.

"உதா­ர­ணத்­திற்கு, கதை­யின் முடி­வை­ச் சிறுவர்களே தேர்ந்­தெ­டுக்­கும் வாய்ப்­பை­த் தரு­கி­றோம். ­க­தை­க­ளின் மூலம் குழந்­தை­களை நன்­றாக கதை சொல்­லும் திறமை உள்­ள­வர்­க­ளாக மாற்ற வேண்­டும் என்­பதே எங்­கள் நோக்­கம்," என்­றார். தொழில்­நுட்ப அம்­சத்­தில் குழந்­தை­கள் அதிக ஆர்­வம் காட்­டு­வ­தால், புத்­த­கங்­கள் வாயி­லாக மட்­டுமே தமிழ் கற்­றுக் கொடுப்­பது முன்­னு­ரி­மை­யாக இருக்­கக்­கூ­டாது என்­றார் திரு ஜெகன்­னாத்.

"வளர்ந்­து­வ­ரும் வெவ்­வேறு தொழில்­நுட்­பங்­களில் தமி­ழைக் கொண்­டு­வந்து அதன் மூலம் குழந்­தை­க­ளுக்கு அம்­மொ­ழியை எவ்­வாறு கற்­றுக்­கொ­டுக்க முடி­யும் என்று நாம் சிந்­திக்க வேண்­டும். கைக்­க­ணினி, கைத்­தொ­லை­பேசி போன்ற கரு­வி­க­ளை­யும் தாண்டி மெய்­நி­கர் தொழில்­நுட்­ப­மும் உள்­ளது. 'கதை நேரம்' போன்ற தளங்­களை உரு­வாக்­கி­னால், குழந்­தை­கள் தமிழ் வார்த்­தை­களை வாசிப்­பது மட்­டு­மல்­லாது அவர்­கள் அதைக் காட்சி வடி­வ­மா­க­வும் கற்­பனை செய்ய முடி­யும். இவ்­வாறு செய்­தால் அவர்­கள் இயல்­பா­கவே தமிழ் மொழி­யில் ஆர்­வம் காட்­டு­வார்­கள். அதைக் கற்­கும் ஆர்­வ­மும் அதி­க­ரிக்­கும்," என்று பகிர்ந்­து­கொண்­டார்.

தமிழ் மொழி மாதத்­திற்­காக இவ்­வ­லைத்­த­ளத்தை அறி­மு­கப்­ப­டுத்­திய திரு ஜெகன்­னாத், எதிர்­கா­லத்­தில் உயி­ரோ­விய அம்­சம் சார்ந்த பட்­ட­றை­களை நடத்த விரும்­பு­வ­தாக தெரி­வித்­தார். மேலும் கதை நேரத்­தில் உள்ள நான்கு கதை­கள் இன்­னும் பல கதை­க­ளுக்கு விதை­கள் என்­றும் கூறி­னார். பதின்ம வய­தி­னர், பெரி­ய­வர்­கள், முதி­ய­வர்­கள் ஆகி­யோ­ருக்­கும் ஏற்ற கதைப்­புத்­தக கதா­பாத்­தி­ரங்­களை உயிர்ப்­பிக்­கும் முயற்­சி­யில் அவர் ஈடு­பட்­டுள்­ளார்.