ஒழுங்குமுறைக்கு வித்திட்ட கடற்படை பயிற்சி அனுபவம்

ஒழுங்குமுறைக்கு வித்திட்ட கடற்படை பயிற்சி அனுபவம்

2 mins read
449f5107-e569-438a-b4aa-116c507418f7
கடற்படை பயிற்சி அதிகாரி 19 வயது மஹேஷ்பாபு ப்ரனேஷ். படம்: ப்ரனேஷ் -

கடற்­ப­டை­யில் பெற்ற அனு­ப­வம் தன்னை ஓர் ஒழுங்குமுறையான மனி­த­ராக மாற்ற உத­வி­ய­து­டன் வாழ்க்­கை­ கு­றிக்­கோள்­களை வகுத்து அவற்றை அடைய ஊக்­கம் தந்­த­தா­கக் கூறு­கி­றார் 19 வயது கடற்­படை பயிற்சி அதி­காரி மஹேஷ்­பாபு ப்ர­னேஷ்.

"கடற்­துறை என்­பது சிங்­கப்­பூ­ருக்கு உயிர் நாடி­யாக இருந்து வரு­கிறது. நமது இறை­யாண்­மை­யைப் பாது­காக்­க­வும் கடல்­வழி மிரட்­டல்­க­ளி­லி­ருந்து தற்­காக்­க­வும் நமக்கு உன்­ன­த­மாக விளங்­கும் வர்த்­த­கத்­தைக் கட்­டிக்­காக்­க­வும் நமது கடற்­படை வலு­வா­ன­தாக இருப்­பது அவ­சி­யம்," என்­றார் ப்ர­னேஷ். மார்ச் 21ஆம் தேதி சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை அதி­கா­ரி­க­ளாக நிய­மிக்­கப்­பட்ட 204 பயிற்சி அதி­கா­ரி­களில் இவ­ரும் ஒரு­வர். சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் புதிய அதி­காரி என்ற பய­ணத்­தில் இந்த குறிப்­பி­டத்­தக்க மைல்­கல் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

உடலை வருத்­தும் கடு­மை­யான பயிற்­சி­க­ளுக்­கி­டையே சக கடற்­படை வீரர்­க­ளு­டன் பயிற்­சி­களை மேற்­கொண்­டது மறக்­க­மு­டி­யாத ஓர் அனு­ப­வம் என்­றார்.

"இரவு முழுக்க தூங்­கா­மல் நீச்­ச­ல­டிப்­பது போன்ற பயிற்­சி­கள் எங்­கள் உடல் பலத்தை மட்­டும் அல்ல, மன­ப­லத்­தை­யும் சோதித்­தன. சோர்­வின் உச்­ச­கட்­டத்தை அடை­யும்­போது முயற்­சி­யைக் கைவிட்­டு­வி­ட­லாம் என்று தோன்­றும். ஆனால் நண்­பர்­க­ளு­டன் பயிற்­சி­யில் ஈடு­ப­டு­வ­தால் எப்­ப­டி­யா­வது இந்த ஒன்­பது மாத கால பயிற்­சி­களை முடித்­து­வி­ட­லாம் என்ற ஊக்­கம் ஏற்­படும்," என்­றார் ப்ர­னேஷ்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கட்­டுப்­பாடு நட­வ­டிக்­கை­க­ளால் கடற்­படை பயிற்­சி­களில் மாற்­றங்­கள் பல அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. சிறு சிறு குழுக்­களில் கடற்­படை வீரர்­க­ளுக்­குப் பயிற்­சி­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. பல­ரு­டன் ஒன்­றாக பயிற்­சி­களை மேற்­கொள்­ளும் உணர்வு இல்­லா­விட்­டா­லும் கற்­றல் அதி­க­மா­கவே உள்­ளது என்று தெரி­வித்­தார் ப்ர­னேஷ். சிங்­கப்­பூர் கடற்­படை, ராயல் தாய்­லாந்து கடற்­படை மற்­றும் இந்­திய கடற்­படை ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய முத்­த­ரப்பு 'சிம்­பேக்ஸ் 2020' (SIMBEX 2020), 'சிட்­மேக்ஸ் 2020' (SITMEX 2020) கடற்­ப­டைப் பயிற்­சி­யில் கலந்­து­கொண்­டுள்ள ப்ர­னேஷ், 'சாங்கி தலைமை குவாட்­ரண்­டில்' படைப்­பி­ரி­வின் தள­பதி பணி­யைத் தொடங்­க­வி­ருக்­கி­றார். கப்­பல் போக்­கு­வ­ரத்து, கப்பல் பராமரிப்பு, அவ­ச­ர­கால சூழ்­நிலை பயிற்சி ஆகிய கப்­பல் பயிற்­சி­கள், கடற்­படை வீரர்­கள் மேற்­கொள்ள வேண்­டிய முக்­கி­ய­மான பயிற்­சி­க­ளா­கும்.

"பயிற்­சி­கள் எவ்­வ­ளவு கடு­மை­யாக இருந்­தா­லும் இறு­தி­யில் அதி­லி­ருந்து நாங்­கள் கற்­றுக்­கொள்­பவை எங்­க­ளது வாழ்க்கை முழு­வ­தும் உத­வி­யாக இருக்­கும் என்று நான் நம்­பு­கி­றேன். சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யில் ஓர் அதி­கா­ரி­யாக அனுபவம் பெற, தனி­ந­ப­ரா­க­வும் அணி வீர­ரா­க­வும் புதிய சவால்­க­ளை­யும் அனு­ப­வங்­க­ளை­யும் தீவி­ர­மாக நாடு­கி­றேன்," என்று கூறி­னார் அவர்.

செய்தி: இந்து இளங்­கோ­வன்