தாயகம் செல்ல முடியாததால் விடுதியிலேயே கொண்டாட ஏற்பாடு

தாயகம் செல்ல முடியாததால் விடுதியிலேயே கொண்டாட ஏற்பாடு

2 mins read
3645312d-b249-4c79-a7e0-0467ea531875
'தி லியோ' வெளி­நாட்டு ஊழி­யர்­கள் விடு­தி­யி­லேயே பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டாடிய வெளிநாட்டு ஊழியர்கள். படம்: தமிழ் முரசு -

தமிழ்­நாட்­டில் பொங்­கல் திரு­நாள், இன, சம­யம் பாராது எல்லாராலும் தமி­ழர் திரு­நா­ளா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது. பொங்­க­லுக்கு முதல்­நாள் போகிப் பண்­டிகை, பொங்­க­லுக்கு மறு­நாள் மாட்­டுப் பொங்­கல், அதற்கு மறு­நாள் காணும் பொங்­கல் என நான்கு நாள்­கள் கோலா­கல கொண்­டாட்­டம் இடம்­பெ­றும்.

அந்­நன்­னா­ளில் குடும்­பத்­தி­னர், நண்­பர்­கள், உற்­றார் உற­வி­னர்­களு­டன் இணைந்து மகிழ்ச்­சி­யைப் பரி­மா­றிக்­கொள்­வ­தற்­காக இங்கு வேலை செய்து வரும் தமி­ழக ஊழி­யர்­கள் பல­ரும் சொந்த ஊர் திரும்பு­வர். ஆனால், இம்­முறை கொவிட்-19 நோய்ப் பர­வல் கார­ண­மாக அவர்­கள் இங்­கேயே பொங்­கல் திரு­நாளைக் கொண்­டா­டும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

"ஒவ்­வோர் ஆண்­டும் பொங்­கல் திரு­நா­ளுக்­குச் சொந்த ஊர் செல்ல வாய்ப்பு கிடைப்­ப­தில்லை. அத­னால் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக எங்­கள் 'தி லியோ' வெளி­நாட்டு ஊழி­யர்­கள் விடு­தி­யி­லேயே பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டாடி வரு­கிறோம். இவ்­வாண்­டும் அதே­போல பொங்­கல் கொண்­டாட்­டத்திற்கு ஏற்­பாடு செய்­ய­வி­ருப்­ப­தாக விடுதி நிர்­வாகி கூறி­யி­ருக்­கி­றார். அந்த நன்­னாளை எதிர்­பார்த்­துக் காத்­திருக்­கி­றேன்," என்­றார் எட்­டு ஆண்டு­க­ளா­க சிங்­கப்­பூ­ரில் வேலை செய்து வரும் திரு வி.பிர­பா­க­ரன், 31.

சொந்த ஊரை­யும் குடும்­பங்­களை­யும் விட்டு வெளி­நாட்­டிற்கு வந்து வேலை செய்­யும் தம்­மைப் போன்­றோ­ருக்கு இது­போன்ற சிறு கொண்­டாட்­டங்­களே ஆறு­தல் தரு­வ­தாக உள்­ளன என்று திரு பிர­பா­க­ரன் குறிப்­பிட்­டார்.

2020ஆம் ஆண்டு பல­ருக்­கும் சவால்­மிக்­க­தாக இருந்த நிலை­யில், இவ்­வாண்­டில் அனை­வ­ருக்­கும் நல்ல வழி பிறக்­கும் எனும் நேர்­மறைச் சிந்­த­னை­யு­டன் பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டா­ட­வி­ருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

கடந்த மூன்­றாண்­டு­க­ளாக தமி­ழகம் சென்று, குடும்­பத்­தி­ன­ரு­டன் பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டாடி மகிழ்ந்­தார் பொங்­கோல் பிபிடி விடு­தி­யில் தங்­கி­யி­ருக்­கும் 29 வயது திரு கர்­ணன் ராஜா.

ஆனால், இம்­முறை பொங்­கல் திரு­நா­ளுக்­குச் சொந்த ஊர் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருப்­பது தமக்கு வருத்­த­ம­ளிப்­ப­தாக அவர் சொன்­னார்.

"வீடு­தோ­றும் வாச­லில் வண்­ணக் கோலம், திரும்­பும் இட­மெல்­லாம் தித்­திக்­கும் செங்­க­ரும்பு, புத்­தாடை என ஊரே குதூ­க­ல­மாக இருக்­கும். குடும்­பத்­து­டன் சேர்ந்து பொங்­கல் கொண்­டா­டு­வதே தனி இன்­பந்­தான். அது இம்­முறை கிடைக்­காது. இருப்­பி­னும், எங்­கள் விடு­தி­யி­லேயே பொங்­கல் திரு­நாளைக் கொண்­டா­டும் எண்­ண­ம் இருக்கிறது. விடு­தி­யை­விட்டு வெளியே செல்ல அனு­மதி இல்­லா­த­தால் தேக்கா சென்று பொங்­கல் கொண்­டா­டு­வ­தற்­கான பொருள்­களை வாங்க முடி­யாது. அத­னால் எங்­கள் விடு­தி­யில் இருக்­கும் பல்­பொ­ருள் அங்­கா­டி­யி­லேயே கரும்பு போன்­றவை விற்­கப்­பட்­டால் நன்­றாக இருக்­கும்," என்­றார் திரு ராஜா.