நோய்ப் பரவல் சூழலிலும் குறையாத பொங்கல் விழா

நோய்ப் பரவல் சூழலிலும் குறையாத பொங்கல் விழா

2 mins read
9fe0b11c-2461-491c-a7bd-de216197c06d
லிட்டில் இந்தியா பொங்கலுக்காக மக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. படம்: தமிழ் முரசு -

பொது­வாக பொங்­க­லுக்­குத் தேவை­யான கரும்பு, மஞ்­சள்கொத்து, இஞ்­சிக்­கொத்து, மா இலை, வாழை இலை, பூ, பொங்­கல் பானை, காய்­க­றி­கள், அரிசி என அனைத்­தை­யும் தேடித் தேடி வாங்க வழக்­க­மாக லிட்­டில் இந்­தி­யா­வில் கூட்­டம் அலை­மோ­தும்.

ஆனால் இவ்வாண்டு அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கொண்டாட்ட உணர்வோடு வந்த மக்களைக் காண முடிந்தது.

கிரு­மித்­தொற்று கட்­டுப்­பாடு கார­ண­மாக தேக்­கா­வுக்கு வரும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் வெகு­வா­கக் குறைந்து ­விட்­டது.

மேலும், அண்­மைய நாட்க­ளா­கத் தொடர்ந்து பெய்து வரும் மழை­யும் லிட்­டில் இந்­தியா மக்கள் அதிகமாகக் கூடுவதில் சிரமத்தை எற்படுத்தியது. இருப்பினும் பொங்­க­லுக்­கான பொருட்­களை லிட்­டில் இந்­தி­யா­வில் வாங்­கியே தீரு­வது என்று வந்­து­செல்­வோரை நேற்று காண­மு­டிந்­தது.

"வழக்­க­மாக பொங்­கல் திரு­ நா­ளை­யொட்டி லிட்­டில் இந்­தி­யா­வில் மக்­கள் கூட்­டம் நிறைந்­தி­ருக்­கும். இவ்­வாண்டு அதி­கமாகக் கூட்­டம் இல்லை. இருப்­பி­னும் கிரு­மித்­தொற்­றிற்கு இடையே இவ்­வ­ளவு ஏற்­பாடுகளைச் செய்­தி­ருப்­பது எங்­க­ளுக்கு மகிழ்ச்­சி­தான். கரும்பு விலை ஏற்­றம்­ மட்டும் அதிர்ச்சியாக இருந்தது. கடந்த ஆண்டு $5க்கு விற்­கப்­பட்ட கரும்பு இப்­போது $7க்கு விற்­கப்­ப­டு­கிறது. விலை ஏறி­னா­லும் பொங்­கல் கொண்­டாட்­டத்­திற்கு கரும்பை வாங்­கித்­தானே ஆக­வேண்­டும்," என­ அவர்­கள் கூறி­னர்.

-

லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் பொங்­க­லுக்­குத் தேவை­யான பொருட்­களை குறித்த காலத்திற்கு இறக்­கு­மதி செய்­வ­தில் இவ்­வாண்டு பல சவால்­களை எதிர்­கொண்­ட­னர்.

"விடாது மழை பெய்­தா­லும் எப்­போ­தும் பொருட்­கள் வாங்க வரும் உள்­ளூர்­வா­சி­கள் வந்­து­கொண்­டே­தான் இருக்­கின்­ற­னர். இந்த ஒரு வாரத்­தில் இன்­று­தான் கூட்­டம் அதி­க­மா­கக் காணப்­ப­டு­கிறது. வாடிக்­கை­யா­ளர்­கள் வந்­து­கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள். முன்­பெல்­லாம் ஒரு வாரத்­திற்­குள் பொருட்­கள் வந்து இறங்­கி­வி­டும். இவ் வாண்டு இரு மாதங்­க­ளுக்கு முன்பே 'ஆர்டர்' செய்ய வேண்­டிய நிலை இருந்­தது," என்று தெரிவித்தார் கார்த்திகா கடை விற்­பனை மேலா­ளர் திரு கோபு­கு­மார், 46.