தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும்

1 mins read
25ba7f89-0911-465d-98e1-3a435ce01838
பொங்கல் பானைகள் லிட்டில் இந்தியாவின் கடைகளை அலங்கரித்தன. படம்: தமிழ் முரசு -

'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனும் தங்களது நம்பிக்கைக்கு ஏற்ப, ஓராண்டிற்கு மேலாக உலகைப் பாடாய்ப்படுத்தி வரும் கொவிட்-19 தொற்றுக்கு அழிவுகாலமாக, தங்களுக்கு விடிவுகாலமாக இவ்வாண்டு பொங்கல் திருநாள் அமையும் எனத் தமிழ்மக்கள் அனைவரும் உறுதியாக நம்புகின்றனர்.

'உழ­வுக்­கும் தொழி­லுக்­கும் வந்­தனை செய்­வோம்' என்று தன் பாட்­டி­லும் உழ­வுத்­தொ­ழி­லுக்கு முத­லி­டம் தந்­தார் மகா­கவி பாரதியார்.

உழ­வில்­லை­யேல் உண­வில்லை. இதை உணர்ந்தே, உழ­வர்­கள் மட்டு­மின்றி தமி­ழர்­கள் அனை­வ­ரும் உழ­வுத்­தொ­ழி­லைப் போற்­றும் வித­மாக பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

அந்த வகை­யில், சிங்­கப்­பூ­ரி­லும் ஆண்­டு­தோ­றும் பொங்­கல் கொண்­டாட்­டங்­கள் களை­கட்­டும். குறிப்­பாக, லிட்­டில் இந்­தி­யா­வின் சிராங்­கூன் சாலை­யில் கட்­டப்­படும் ஒளி சிந்­தும் வண்­ணத் தோர­ணங்­கள் காண்­போ­ரி­டத்­தில் பொங்­கல் திரு­நாள் உற்­சா­கத்தை ஊற்­றெ­டுக்­கச் செய்­யும்.

-

ஆனால், காலங்­கா­ல­மா­கக் கொண்­டா­டப்­பட்டு வரும் அந்த நன்­னாளை இம்­முறை கொவிட்-19 நோய்ப் பர­வல் கட்­டுப்­பா­டு­க­ளால் கோலா­க­ல­மா­கக் கொண்­டாட வாய்ப்­பில்­லா­மல் போய்­விட்­டது. இருப்­பி­னும், பிரம்­மாண்­ட­மாக இல்­லா­வி­டி­னும் இம்மாதம் 14ஆம் தேதி வியாழக்கிழமையன்று வரும் பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டாட இம்­முறை வித்­தி­யா­ச­மான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.