பல நிகழ்ச்­சி­க­ளுடன் பொங்கல் கொண்டாட்டம்

பல நிகழ்ச்­சி­க­ளுடன் பொங்கல் கொண்டாட்டம்

2 mins read
b70debcd-14a4-434e-8fc2-ad4def61a133
பொங்­கல் திரு­நாள் கொண்­டாட்­டங்­கள் பொது­மக்­க­ளை­யும் வர்த்­தகர்­க­ளை­யும் உற்­சா­கத்­து­டன் வைத்தி­ருக்­கும் என்­ப­தில் ஐயம்­ இல்லை. படம்: தமிழ் முரசு -

'லிஷா' எனும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கம் தொடர்ந்து 21வது ஆண்­டாக பொங்­கல் கொண்­டாட்­டங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

ஆயி­னும், கொவிட்-19 பர­வல் கார­ண­மாக இவ்­வாண்டு கொண்­டாட்­டம் அர­சாங்­கத்­தின் விதி­முறை­க­ளுக்கு இணங்க பாது­காப்பு நட­வ­டிக்­கை­களும் கட்­டுப்­பா­டு­களும் அடங்­கிய ஒன்­றாக இருக்­கும்.

"கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களால் கொண்­டாட்­டங்­க­ளின் பிரம்­மாண்­ட­மும் அவற்­றில் கலந்­து­கொள்­வோர் எண்­ணிக்­கை­யும் குறை­வாக இருப்­பி­னும் பொங்­கல் திரு­நாள் உணர்­வும் உற்­சா­க­மும் எள்­ள­ள­வும் குறை­யாது," என்­றார் 'லிஷா' தலைவர் சி.சங்­க­ர­நா­தன்.

'லிஷா' தலைமைப் பொறுப்பை ஏற்­ற­பின் திரு சங்­க­ர­நா­தன் வழி­நடத்­த­வி­ருக்­கும் முதல் பொங்­கல் கொண்­டாட்­டம் இது.

"சிங்­கப்­பூ­ரில் பொங்­கல் கொண்­டாட்­டங்­கள் சற்று வேறு­பட்­ட­து. பிற இனத்­த­வ­ரை­யும் சேர்த்­துக்­கொண்டு, ஒருங்­கி­ணைந்து கொண்­டா­டு­கி­றோம். உணவு உண்­ணும் ஒவ்­வொ­ரு­வ­ரும் பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டா­ட­லாம். இது இனம், சம­யம் சார்ந்­த­தல்ல என்­பது என் கருத்து," என்றார் அவர்­.

சிறி­ய­வர் முதல் பெரி­ய­வர் வரை, பல இனத்­த­வ­ரும் கலந்­து­கொண்டு மகி­ழும்படி பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் 'லிஷா' ஏற்­பாடு செய்­துள்­ளது.

-

"ஒவ்­வோர் ஆண்­டும் மாண­வர்­க­ளுக்­கென மாட்­டுத் தொழு­வச் சுற்­றுலா போன்ற பல நட­வ­டிக்­கை­களை ஏற்­பாடு செய்து வரு­கி­றோம். இவ்­வாண்­டி­லும் அது தொட­ரும். தமி­ழர் திரு­நா­ளான பொங்­கல் குறித்து இளம் தலை­மு­றை­யி­னர் தெரிந்­து­கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தரும் என நம்­பு­கி­றேன்," என்­றார் திரு சங்­க­ர­நா­தன்.

தீபா­வ­ளிப் பண்­டி­கையை கொரோனா தொற்­றுக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளு­டன் கொண்­டா­டி­யது போலவே, இப்­போது பொங்­கல் கொண்­டாட்­டங்­க­ளும் பொது­மக்­க­ளுக்­கும் வர்த்­த­கர்­க­ளுக்­கும் மாறு­பட்ட ஒன்­றாக இருக்­கப் போகிறது என்­றார் 'லிஷா' ஆலோ­சகர் திரு ராஜ்­கு­மார் சந்­திரா.

இம்­மாத இறுதி வரை நீடிக்­கும் பொங்­கல் திரு­நாள் கொண்­டாட்­டங்­கள் பொது­மக்­க­ளை­யும் வர்த்­தகர்­க­ளை­யும் உற்­சா­கத்­து­டன் வைத்தி­ருக்­கும் என்­ப­தில் ஐயம்­இல்லை.