வேலை வாய்ப்புகளைத் தேட இருமொழித் திறன் கைகொடுக்கிறது:துணை அமைச்சர்

வேலை வாய்ப்புகளைத் தேட இருமொழித் திறன் கைகொடுக்கிறது:துணை அமைச்சர்

1 mins read
0970832e-4346-4d82-8eda-4ce4ab98504c
பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்கள் இடமிருந்து மெல்வின் ஹெலன், ஹபீசா ஐனி, அர்ஃபா மாலிக், அபிராமி குமரகுரு, பெர்னாமா செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் காந்தி காசிநாதன், தொடர்பு, தகவல் துணை அமைச்சர் சீ ஹொங் டாட். படம்: திமத்தி டேவிட் -

அமைச்­சு­கள், அர­சாங்க அலு­வ­ல­கங்கள், ஊட­கங்கள் ஆகியவற்றில் பயன்­படுத்­தப்­படும் தமிழ், மலாய், சீன மொழிச் சொற்­களை தொடர்பு தகவல் அமைச்சு ஒரு­மு­கப்­படுத்தி வரு­கிறது.

அதி­கா­ரத்­துவ மொழி­களில் உள்ள அர­சாங்கத்­தின் தகவல் தொடர்பை வலுப்­படுத்த மொழி­பெ­யர்ப்­பின் தரத்தை உயர்த்­து­வ­தில் அர­சாங்கம் கடப்­பாடு கொண்­டுள்­ளது என்று கூறியுள்ளார் தொடர்பு, தகவல் துணை அமைச்­சர் சீ ஹொங் டாட்.

உமறுப் புலவர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் நேற்று நடந்த மாண­வர்­களுக்கான தமிழ் மொழி­பெ­யர்ப்பு பயி­ல­ரங்­கில் கலந்­து­கொண்டு பேசிய அவர், "சரியான மொழி­பெ­யர்ப்பே நமது கடப்­பாடு" என்றார்.

அர­சாங்க தகவல் தொடர்பு ஆவ­ணங்களில் தமிழ் மொழி ­பெ­யர்ப்­பின் தரத்தை மேம்படுத்­து­வ­து­டன் மொழி­பெ­யர்ப்புப் பிழை­களை தவிர்க்கும் நோக்கில் தேசிய மொழி பெயர்ப்புக் குழுவின் தமிழ் மொழி­பெ­யர்ப்பு ஆலோசனைக் குழு தனது மறு­ஆய்­வின் பரிந்­துரை­களை ஆண்டு இறு­திக்­குள் தொடர்பு தகவல் அமைச்­சி­டம் சமர்ப்­பிக்­கும் என்றும் அவர் கூறினார்.

"பிற மொழி­களில் கருத்­து­களைப் பரி­மா­றும் திறன் அனைத்­து­லக ரீதியில் விரி­வடை­யும் நிறு­வ­னங்களில் பணி­யாற்ற சாத­க­மாக அமை­கிறது. அரசு மற்றும் தனியார் துறை­களில் வேலை வாய்ப்­பு­களைத் தேட இரு மொழி திறன் கைகொ­டுக்­கிறது," என்று தெரிவித்தார் திரு சீ.

பட்­ட­க்கல்வி மாணவர்களுக்கான புதிய தகவல் சேவை (மொழி­பெ­யர்ப்பு) உப­கா­ரச் சம்ப­ளம் குறித்­தும் குறிப்­பிட்ட அவர், "இத்தகைய நிகழ்ச்­சி­களை மேலும் நடத்துவது குறித்து மாணவர்களின் கருத்­து­களை வர­வேற்­கி­றோம்," என்று தமிழில் கூறினார்.