கட்டுமான நிறுவனங்கள் இயந்திரமயமாக நிதியுதவி

2 mins read
2fa23d16-997c-44f9-aca9-52b1fab6c492
இயந்திரங்களையும் தானியங்கிகளையும் பயன்படுத்துவதால் சாயம் பூசுவது, துளையிடுவது போன்ற அதிக ஊழியர்கள் தேவைப்படும் பணிகளில் ஆட்களைக் குறைப்பதுடன் அவற்றை துரிதப்படுத்தலாம் என்று திரு டான் கியட் ஹாவ் கூறினார். கோப்புப் படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கும் தானி­யங்கி முறைக்­கும் மாறு­வ­தற்கு நீண்­ட­கா­ல­மாக ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள கட்­டு­மான நிறு­வ­னங்­கள் 80% வரை நிதி­யு­தவி பெற ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­கிறது.

அது பற்­றிய கூட்­டுத் திட்­டத்தை கட்­டட கட்­டு­மான ஆணை­ய­மும் தக­வல்­தொ­டர்பு, ஊடக மேம்பாட்டு ஆணை­ய­மும் தொடங்­கி­யுள்­ளன.

இந்த ஒருங்­கி­ணைந்த இயந்­தி­ர­வி­யல், தானிங்­கித் திட்­டத்தை தேசிய வளர்ச்சி மற்­றும் தொடர்பு, தக­வல் துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ் நேற்று அறி­வித்­தார். நான்கு நாட்­கள் நீடித்த அனைத்­து­லக கட்­டட வார இணை­ய­வழி நிகழ்­வில் அவர் பேசி­னார்.

இத்­திட்­டத்­தின் கீழ், இயந்­தி­ரங்­கள், தானி­யங்­கிச் சாத­னங்­க­ளைப் பெறு­வ­தற்­கான தகு­தி­பெ­றும் செல­வு­களில் 80% வரை­யி­லான மானி­யத்­துக்கு சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­களும் பெரிய கட்­டு­மான நிறு­வ­னங்­களும் விண்­ணப்­பிக்­க­லாம்.

கட்­ட­டத் துறை­யில் உள்ள இத்­த­கைய நிறு­வ­னங்­கள் குறைந்த திறன்­பெற்ற ஊழி­யர்­க­ளைச் சார்ந்­தி­ருப்­ப­தைக் குறைக்­க­வும் உற்­பத்­தித் திறனை உயர்த்­த­வும் இயந்­தி­ரங்­களும் தானி­யங்­கிச் சாத­னங்­களும் உத­வும் என்று திரு டான் கூறி­னார். அத்­து­டன் வேலை­யி­டப் பாதுகாப்பை மேம்­ப­டுத்­த­வும் இத்­த­கைய தீர்­வு­கள் உத­வும் என்­றும் திரு டான் தெரி­வித்­தார்.

கட்­டு­மா­னத் தளங்­களில் உய­ரத்­தி­லி­ருந்து கீழே விழு­வது, அதிக எடை­யுள்ள சாத­னங்­க­ளைத் தூக்­கும்­போ­தும் நகர்த்­தும்­போ­தும் ஏற்­ப­டக்­கூ­டிய காயங்­கள் போன்­றவை ஏற்­படும் அபா­யத்­தை இயந்­தி­ரத் தொழில்­நுட்­பங்­கள் குறைக்­கும் என்று திரு டான் குறிப்­பிட்­டார்.

கட்­டட, கட்­டு­மா­னத் துறை­யில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு உதவ, இத்­த­கைய தொழில்­நுட்­பங்­க­ளைத் தயா­ராக வைத்­தி­ருக்­கும் நிறு­வ­னங்­கள் தங்­கள் திட்­டங்­களை முன்­வைக்க வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார். அத்­தொ­ழில்­நுட்­பங்­கள் தயா­ரா­கும்­போது அவற்­றைப் பயன்­ப­டுத்­திக்கொள்­ளும்­படி திரு டான் கட்டட, கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

புத்­தாக்­கத் தீர்­வு­க­ளைச் சோதித்து அனு­மதி வழங்­கும் கட்­ட­டப் புத்­தாக்க செயல்­கு­ழு­வில் இயந்­தி­ர­ம­யம், தானி­யங்­கிச் சாத­னங்­கள் போன்­றவை 2019இல் சேர்க்­கப்­பட்­டுள்­ளதை திரு டான் சுட்­டி­னார். இச்­செ­யற்­குழு இது­வரை 100 புத்­தாக்­கத் தீர்­வு­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்­கி­யுள்­ளது. அதில் இரண்டு இயந்­தி­ர­ம­யத் தீர்­வு­க­ளா­கும்.

மவுண்ட் அல்­வீ­னியா மருத்­துவ மனை கட்­ட­டம் இவ்­வாண்டு விரி­வாக்­கப்­ப­டும்­போது, அத்­த­கைய ஒரு தீர்வு பயன்­ப­டுத்­தப்­படும். தானி­யங்கி தூக்கு இயந்­தி­ரம், எடை அதி­கம் உள்ள கட்­டு­மா­னப் பொருட்­க­ளைத் தூக்­கிச் செல்­லும்.

இந்த இயந்திரம் உற்­பத்­தித் திறனை 30% மேம்­ப­டுத்தி வேலை­யி­டப் பாது­காப்பை உயர்த்த உத­வும் என்று திரு டான் கூறி­னார்.