வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுவரும் வல்லமை பெற்றவர்கள் நண்பர்கள்

வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுவரும் வல்லமை பெற்றவர்கள் நண்பர்கள்

2 mins read
d67955dd-6271-49d3-961c-e9df943620b5
படம்: இணையம் -

நட்பு ஒரு மனிதனின் வாழ்வில் பல மாற்றங்களைக் ஏற்படுத்தும் வல்லமை பெற்றது. ஆரோக்கியம் குறித்த முடிவுகளில் தெரிந்தோ தெரியாமலோ நண்பர்களால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று பிபிசியின் (BBC) அறிக்கை கண்டறிந்துள்ளது. நம் செயல்கள் நமது கட்டுப்பாட்டில் உள்ளன என்று நாம் நினைத்தாலும் பல வேளைகளில் நம் நண்பர்களின் முடிவுகள் நம்மை பாதிக்கின்றன.

நம்மை சுற்றியுள்ள நண்பர்கள் அவரவர் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளைச் சிறிதளவு நிர்ணயிக்கின்றன. எனவே தான் நல்ல நண்பர்களை தேடிக் கொள்வது வாழ்வில் முக்கியம் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு.

மற்றவரிடமிருந்து வேறுபட்டு இருக்கக் கூடாது என்று நினைக்கும் மனிதனின் போக்கினால் நாம் இவ்வாறு செயல்படுகிறோம் என்பது உளவியலாளர்களின் கருத்து.

நமக்கே தெரியாமல் நமது ஆழ்மனது சுற்றி இருப்பவர்களின் செயல்களைக் கவனித்து நம்முடைய நடவடிக்கைகளை மாற்றியமைக்கிறது என்று பிபிசி உளவியலாளர் அம்பெர் தெரிவித்தார்.

2019ல் நடத்தப்பட்ட ஆய்வொன்று மக்களுடைய கருத்துக்கள் அவர்களுடைய சக நண்பர்களின் கருத்துக்களைப் பொறுத்து மாறுவதாக காட்டுகிறது.

நண்பர்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற தொடங்கும்போது சுற்றத்தாரும் ஆரோக்கியமான முடிவுகளை எடுக்கத் தூண்டப்படுவர். ஒருவருக்கு ஒருவர் உதவியாய் இருந்து, உணவு பழக்கங்களை சீர்திருத்த உந்துதல் அளித்து, நண்பர்களானோர் சேர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவர்.

ஆகையால், நண்பர்கள் ஒரு மனிதனின் வாழ்வை எளிதில் மாற்றிவிட முடியும். நல்ல நண்பர்களை அருகில் வைத்துக்கொள்வது வாழ்க்கையை சீர்படுத்தும். அவர்கள் வளர்வதோடு, நாமும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு பற்பல வகைகளில் வளர்வோம்.