பள்ளியைக் குடும்பமாக காணும் மாணவர்

பள்ளியைக் குடும்பமாக காணும் மாணவர்

2 mins read
787ad0a7-f289-4f57-8f5f-4b078bfdf031
படம்: செயின்ட் ஜோசப் கல்வி நிலை­யம் -

செயின்ட் ஜோசப் கல்வி நிலை­யத்­தில் பயின்­ற­தன் மூலம் தாம் இரண்டு முக்­கி­யப் பாடங்­க­ளைக் கற்­றுக்­கொண்­ட­தாக 27 வயது திரு வருண்­மூர்த்தி நெடுஞ்­செ­ழி­யன் கூறி­னார். பள்ளி அவரினுள் கல்வி ஆர்வத்தை தூண்டியதோடு பல வாழ்க்கை பாடங்களை கற்றுத்தந்தது. இவையே தற்போது அவர் பெற்ற வெற்றிகளுக்கும் முன்னேற்றத்திற்கும் கைகொ­டுத்­துள்­ளன என்று அவர் குறிப்­பிட்­டார்.

பணியிடத்தில் அடிப்­ப­டை பொறுப்புகளை செய்து முடிக்க, உயர்­நி­லைப் பள்­ளி­யில் கற்­றுக்­கொண்ட கணி­த­மும் இதர பாடங்­களும் பேரு­தவி புரிந்ததாக அவர் கூறி­னார்.

பள்ளி ஆசி­ரி­யர்­கள் தமக்­குத் துணை­பு­ரிந்த நாள்­களை நினை­வு­கூர்ந்தார் திரு வருண். பாடத்­தை­ மிகுந்த ஈடு­பாட்­டு­டன் தெளி­வுற விளக்­கிய தம்­மு­டைய உயி­ரி­யல் ஆசி­ரி­யர் திரு லிம், வரலாற்று ஆசிரியர் திரு டெரன்ஸ் ஆகியோர் தமக்கு ஊக்கமளித்ததாக அவர் குறிப்­பிட்­டார்.

ஒரு முறை­கூட எரிச்­ச­ல­டை­யா­மல் பாடத்­தைத் தெளி­வா­கக் கற்­பித்த திரு லிம், பாடத்தை உற்­சா­க­மாக கற்­றுக்­கொள்ள புதுப்­புது சலிப்பு தட்­டாத வழி­க­ளைக் கண்­ட­றிந்து அறிமுகப்படுத்துவார். இக்காரணத்தால், திரு வரு­ணின் மன­தில் அவர் நீங்கா இடம் பிடித்­தார்.

இத­னால், பாடங்­களை வெறும் தேர்­வுப் பாடங்­க­ளாகப் பார்க்­கா­மல் கதைகளாக பார்க்­கும் அணு­கு­மு­றையை அறிந்து­கொண்டு தேர்­வுகளிலும் திரு வருண் சிறப்­பா­கச் செய்­தார்.

இதுபோன்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நல்ல நட்பு உருவாகினால் மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து மேன்மேலும் வாழ்க்கைப் பாடங்கள் கற்றுக்கொண்டு அர்த்தமுள்ள கல்வி பயணத்தை வகுத்துக்கொள்ளலாம். அத்துடன், மாணவர்களுக்கு எந்த உதவி தேவையென்றாலும் அதை வழங்க ஆசிரியர்கள் அருகிலேயே இருப்பார்கள்.