சமூகத் தோட்டங்களில் அதிக ஆர்வம் காட்டும் சிங்கப்பூரர்கள்

2 mins read
a6739589-cfcf-43a2-8817-43bc3872b1fb
குடியிருப்பாளர்கள் ஒன்று கூடி தோட்ட வேலைகளில் ஈடுபடுவதோடு அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர் படம்: தேசிய பூங்கா கழகம் -

புதிதாக கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களின் மேற்­கூ­ரை­யில் சமூ­கத் தோட்­டம் அமைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. தொட்டித் செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு இவ்வாய்ப்பு பயனுள்ளதாய் அமைகின்றது.

2021ஆம் ஆண்டு தியோங் பாரூ­வில் அமைக்கப்பட்ட ஒரு சமூ­கத் தோட்­டத்தின் காய்­க­றி­களும் கீரை வகை­களும் அங்குள்ள குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கே தரப்­பட்டது. கத்­தரிக்­காய், காய்­லான் கீரை, கங் கோங் கீரை என்று பல்வேறு வகையான காய்­கறி, கீரை வகை­கள் அத்தோட்­டத்­தில் விளைந்திருந்தன.

தோட்ட வேலைகளில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் தங்களின் பொழுதுபோக்கில் ஈடுபடுவதோடு குடியிருப்புப் பேட்டைக்குப் பசுமை சேர்க்கவும் செய்கின்றனர். மேலும், சக குடியிருப்பாளர்களுடன் நேரம் செலவழித்து நட்பை வளர்க்கவும் செய்கின்றனர்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள பல சமூ­கத் தோட்­டங்­கள் தன்­னிச்­சை­யாக இயங்கி வருகின்றன. இவற்றில் தொண்டூழியம் செய்யவும் வாய்ப்புகள் உண்டு. இயற்கையில் ஆர்வம் உள்ளோர் தங்கள் நேரத்தை இது போன்ற இடங்களை பராமரிக்க செலவிடுகின்றனர்.

மக்கள் தங்களுடைய குடியிருப்பு பேட்டையில் உள்ள தோட்டத்தில் செடிகள் வளர்க்க குலுக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அடுக்குமாடி கட்டடங்களின் மேற்கூரையில் மட்டும் அல்லாது, சில பூங்காக்களில் குறிப்பிட்ட நிலப்பகுதியை வாடகைக்கு எடுத்தும் மக்கள் தங்கள் தோட்டத்து வேலைகளில் ஈடுபடலாம். பூங்காக்களுக்கு அழகூட்டுவதில் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு என்று உணரலாம்.

இது போன்ற சமூக தோட்ட முயற்சிகள் சிங்கப்பூரில் சமூ­கப் பிணைப்பை வலுப்­ப­டுத்த கைகொடுப்பவை. நீடித்த நிலைத்தன்மையை இம்முயற்சிகள் ஊக்குவிப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.