உடற்பயிற்சியில் விருப்பம் இல்லாதவர்களுக்கு சுறுசுறுப்பான பொழுதுபோக்குகள் கைகொடுக்கின்றன

உடற்பயிற்சியில் விருப்பம் இல்லாதவர்களுக்கு சுறுசுறுப்பான பொழுதுபோக்குகள் கைகொடுக்கின்றன

2 mins read
946b3ecb-5d29-4fd4-926d-25a322606cd2
பூப்பந்து போன்ற விளையாட்டுகள் மூலம் சுறுசுறுப்பான வாழ்க்கை படம்: இணையம் -

அதிகமான இளையர்களுக்கு உடற்­ப­யிற்சி செய்­வ­தில் போதிய ஈடு­பாடு இல்லை என்­பதை ஓர் அண்­மை­ய ஆய்­வு கண்டறிந்தது. உல­க­ள­வில் ஒப்­பி­டும்­போது, சிங்­கப்­பூ­ரில் குறிப்பாக 18 வய­துக்கு உட்­பட்டோர் போதிய அள­வு உடற்­ப­யிற்சி செய்­வ­தில்லை என்றும் அது கண்டறிந்தது.

இன்றைய உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறையை கருத்தில் கொள்ளும்போது இத்தகவல் கவலையூட்டுகிறது. ஆரோக்கியத்துடன் வாழவும் உடலைச் சீருடன் நோயின்றி வைத்திருக்கவும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

உடற்பயிற்சி செய்வதில் நாட்டம் இல்லாதவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டு தம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். சுவிஸ் காட்­டேஜ் உயர்­நி­லைப் பள்­ளி­யில் பயி­லும் மாணவர் விதுர் காற்­பந்து விளை­யா­டு­வ­தில் நாட்­டம் கொண்­ட­வர். சிறு வய­தில் இருந்தே தன் நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து காற்­பந்து விளை­யா­டு­வதை வழக்­க­மா­கக் கொண்ட இவர், இந்த பழக்­கத்தை இன்­று­வரை கைவி­ட­வில்லை.

இவரை போன்று, இளைஞர்கள் காற்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம். சிலர் மிதிவண்டி ஓட்டுவது தங்களுக்கு பொழுதுபோக்காக இருப்பதால் அதையே உடற்பயிற்சியாக மேற்கொள்கின்றனர்.

வேறு சிலரோ கலைகளில் ஈடுபட்டு தம் உடலை கட்டுடன் வைத்துக்கொள்கின்றனர். நடனம் ஆடுவதில் அதிக ஆர்வம் கொண்டோர் கலைப்பள்ளிக்கு சென்று பரதநாட்டியம், கதக், கிராமிய நடனம் முதலிய நடன பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அத்துடன் தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்வது உடல் உழைப்பில் ஈடுபட உதவுகின்றன.

இன்று இணையத்தில் ஆரோக்கியமாக இருக்க விரும்புவோருக்கு உடற்பயிற்சிக்கு அப்பால் ஈடுபடக் கூடிய நடவடிக்கைகள் குறித்து ஏராளமான தகவல்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் பிடித்தமான நடவடிக்கை ஒன்று நிச்சயம் இருக்கும். அதை கண்டறிந்து சுலபமாக கிட்டும் ஆரோக்கிய குறிப்புகளைச் சாதகமாக பயன்படுத்தி சீரான வாழ்க்கை வாழலாம்.