உடற்குறையுள்ளோருக்கு வழிகாட்டும் கலை துறை நிபுணர்கள்

உடற்குறையுள்ளோருக்கு வழிகாட்டும் கலை துறை நிபுணர்கள்

2 mins read
44589541-7ce3-4482-8028-c5a6f2a2f657
கலை திறன்கள் கற்றபின் நிகழ்ச்சி படைத்த ஜஸ்ப்ரீட் கௌர் படம்: "ஆர்ட்:டிஸ்" (ART:DIS) -

லாப நோக்கமற்ற "ஆர்ட்:டிஸ்" (ART:DIS) அமைப்பு உடல் குறையுள்ள பங்கேற்பாளர்களுக்கு கலை துறை வழிகாட்டி திட்டத்தின் மூலம் கலை திறன்களை மேம்படுத்த உதவுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்ற ஒருவர் தான் ஜஸ்ப்ரீட் கௌர். தாளநயம் கொண்டுள்ள அவருக்கு நிகழ்ச்சிகளுக்காக தம் குரலை கண்டறிவதுதான் சிரமமாக இருந்தது. மனநலிவால் பாதிக்கப்பட்ட இந்த இளம் நடிகருக்கு நாடக ஆசிரியர் திரு ஹரேஷ் ஷர்மா வழிகாட்டினார். இம்முயற்சிகளின் பயனாக ஜஸ்ப்ரீட் 42 வயதில் சொந்த நிகழ்ச்சி ஒன்றை படைத்தார்.

திரு ஹரேஷ் தனக்கு எளிதில் புரியும் வகையில் கற்றுக் கொடுத்ததாக கூறினார் ஜஸ்ப்ரீட். அவர் தந்த வழிகாட்டுதலால் தன்னம்பிக்கை கூடியதாகவும் அவர் சிஎன்ஏ (CNA) செய்தியிடம் தெரிவித்தார்.

இது போன்ற திட்டங்கள் மூலம் பலரும் பயனடைந்துள்ளனர். அனைத்து உடற்குறையுள்ளோரும் இனி கலை நிபுணர்களுடன் இணைந்து ஓராண்டு காலத்திற்கு கற்றல் மேற்கொள்ளலாம்.

உடற்குறையுள்ளோருக்கான உகந்த வாய்ப்பாக அமையும் இந்த திட்டம் போதிய நிதி உதவி இல்லாதது, வளப்பற்றாக்குறை முதலிய சவால்களால் குறைந்தபட்ச நபர்களையே மாணவர்களாக ஏற்கிறது. இதுவரை ஒன்பது கலைஞர்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடிந்ததாக ஆர்ட்:டிஸ் அமைப்பு தெரிவித்தது.

இருப்பினும், இது ஒரு நல்ல தொடக்கம் என்றும் திட்டத்தின் தாக்கத்தை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் அமைப்பு கூறியது. தற்போது சமூகத்தில் உள்ள வாய்ப்புகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு பெரிய தளத்தை இக்கலைஞர்களுக்கு ஏற்படுத்தி தருவது மிக முக்கியம்.

இது போன்ற அனுபவங்களை உடற்குறையுள்ளோர் பெற்றுக் கொண்டாலும் வேலை வாய்ப்புகள் பெறுவது தொடர்ந்து ஒரு சவாலாகவே இருக்கிறது. வேலை இடங்களில் இவர்களுக்கு சம வாய்ப்புகள் இருந்தால்தான் அவர்கள் மென்மேலும் வளர முடிகிறது.

உடற்குறை உள்ளவர்களும் கலைஞர்களாக சிங்கப்பூரில் செழிக்க முடியும் என்பதை வலியுறுத்த எண்ணம் கொண்டுள்ளது ஆர்ட்:டிஸ் அமைப்பு. சரியான வாய்ப்புகளுடனும் கட்டமைப்புகளுடனும் இவர்கள் சிங்கப்பூரின் கலை துறைக்கு பன்முகத்தன்மை கூட்டுவர் என்பது அமைப்பின் நம்பிக்கை.