மின்சார வாகனங்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பெரிதும் கைகொடுக்கின்றன

மின்சார வாகனங்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பெரிதும் கைகொடுக்கின்றன

2 mins read
89b0d0f8-37f4-41bf-a357-f819c664ada6
சிங்கப்பூரில், அரசாங்க கட்டணக் கழிவுகள் முற்றிலும் மின்சாரத்தை பயன்படுத்தும் வாகனங்களின் விலையை $45,000 வரை குறைக்கக்கூடும். -

தொழில்நுட்ப வளர்ச்சிகள் மின்சார வாகனங்களுக்கும் எரிசக்தி வாகனங்களுக்கும் இடையிலான விலை இடைவெளியை குறைக்க உதவுகின்றன.

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாகனங்கள் இன்று சிங்கப்பூர் சாலைகளில் காணப்படுகின்றன. மொத்தம் ஏறத்தாழ 6.4 மில்லியன் டன் கணக்கிலான கரியமில வாயு ஒவ்வோர் ஆண்டும் வெளியேற்றப்படுகிறது.

தற்போது 0.5 விழுக்காடு வாகனங்களே மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. ஆனால், சிங்கப்பூரில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிகள் நடப்பில் உள்ளன.

சிங்கப்பூரின் பசுமை போக்குவரத்து புரட்சியின்படி 2040ஆம் ஆண்டிற்குள் எரிசக்தி பயன்படுத்தும் அனைத்து வாகனங்களையும் பயன்பாட்டிலிருந்து நீக்க திட்டம் உள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டு உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் சிங்கப்பூர் உறுதியாக உள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் தீவு முழுவதும் 28,000 மின்னூட்டு வசதி உள்ள இடங்களை கொண்டுவர வேண்டும் என்ற இலக்கு இப்போது 60,000 ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் சற்று பின்தங்கியே இருக்கிறது. 2020ல் நார்வேயின் ஒஸ்லோ நகரின் வாகன விற்பனையில் மின்சார வாகனங்கள் 75 விழுக்காடு பங்கு வகித்தன.

சிங்கப்பூர் $30 மில்லியன் நிதியை மின்வாகனம் சார்ந்த முயற்சிகளுக்காக ஒதுக்கியுள்ளது. சிங்கப்பூரில், அரசாங்க கட்டணக் கழிவுகள் முற்றிலும் மின்சாரத்தை பயன்படுத்தும் வாகனங்களின் விலையை $45,000 வரை குறைக்கக்கூடும்.

சிங்கப்பூர் பெருவிரைவு ரயில் போக்குவரத்து நிறுவனத்தின் பொதுப் பேருந்துகள் பெரும்பாலானவை மின்சாரம் பயன்படுத்துபவையாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் இதை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசாங்கம்.