தமிழ்நாட்டு மன்னர்கள் - பாண்டிய மன்னர்களின் வரலாறு

தமிழ்நாட்டு மன்னர்கள் - பாண்டிய மன்னர்களின் வரலாறு

2 mins read
046fbca1-9264-4aab-b213-d6189fd191e9
பாண்டியர்களின் சின்னம் மீன் -

பழந்தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் பாண்டிய ராஜா. பாண்டியர்கள் தமிழ்நாட்டில் பல பகுதிகளை ஆண்டனர். மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தற்போதைய கேரள மாநிலத்தின் தென்பகுதி ஆகியவற்றை அவர்கள் ஆட்சி செய்தனர்.

இந்திய தேசத்தில் ஆண்ட எந்த ஒரு மன்னர் குலத்திற்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் பெயர் பட்டியல் நீண்ட ஒன்று.

"சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சேரும்" என்று போற்றப்படுபவர்கள் பாண்டியர்கள். முச்சங்கங்கள் வாயிலாக தமிழ் வளர்த்ததை எட்டாம் நூற்றாண்டு நூலான இறையனார் களவியல் உரை கூறுகிறது.

பாண்டியர்கள் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். அவர்களின் துறைமுக நகரமாக கொற்கை இருந்தது. பாண்டியர்களின் கொடியில் மீன் சின்னத்தை காணலாம். அவர்களது அடையாள பூவாக வேம்பு இருந்தது.

காவிரி நதி பாண்டிய தேசத்தை செழிக்க வைத்தது. காவிரி நதிக்கரையில் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட தஞ்சை, இராமேஸ்வரம் ஆகிய பகுதிகள் சிறப்பு வாய்ந்தவை.

சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் தலை சிறந்தவர் நெடுஞ்செழியன். தந்தையின் மறைவிற்கு பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர்.

இளம் வயதிலே போருக்குச் சென்ற இவர் தம் வீரத்தினால் புகழடைந்தார். நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன், ஆற்றல் இல்லாதவன் என்றெண்ணி போர் தொடுத்தவர்களை அவர் வீழ்த்தியாது சிறப்புக்குரியது.

நெடுஞ்செழியன் பாண்டியன் ஒரு நல்ல புலவராகவும் வாழ்ந்தார் எனக் கூறப்படுகிறது.

பாண்டிய மன்னர் குலத்தின் விரிவான வரலாற்றையும் மரபையும் குறித்த தகவல்கள் ஏராளம். தோண்ட தோண்ட கிடைக்கப்பெறும் நீர் போல தமிழ்நாடு மன்னர்களின் வரலாற்றில் அறிந்துகொள்ள கூடியவை எண்ணிலடங்கா.