தமிழ்நாட்டு மன்னர்கள் - சோழ மன்னர்களின் வரலாறு

தமிழ்நாட்டு மன்னர்கள் - சோழ மன்னர்களின் வரலாறு

2 mins read
208a3598-22f9-4b2d-baa0-1555409b40a7
சோழர் பெருமைகளில் ஒன்றான தஞ்சை பெரிய கோவில் -

அண்மையில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழர்களிடம் வரலாற்று பெருமையை மக்களுக்கு நினைவூட்டியது. குறிப்பாக, சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் பெரும் ஆர்வத்துடன் இத்திரைப்படத்தை சென்று பார்த்தனர்.

சோழர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப்படுகை பகுதியில் தோன்றியது.

காவிரியின் பெருமையைப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. காவிரி சோழ மன்னர்களின் மூலாதாரமாக விளங்கியது. அவர்கள் பேணி காத்த காவிரி நதி, சோழர்களை எல்லா பருவநிலை காலங்களிலும் காப்பாற்றியது.

ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னர்குலத்தவர் முதல் சாதாரண உழவர்கள் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழா கொண்டினார்கள் என்று கூறப்படுகிறது.

பல்லவர்களை வீழ்த்தி 9ஆம் நூற்றாண்டில் தமது நீண்ட ஆட்சியை தொடங்கினர் சோழர்கள். 13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் படையெடுத்து வரும்வரை, அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு, சோழ வேந்தர்களின் ஆட்சி நீடித்தது.

முதலாம் இராஜராஜ சோழனும், அவரது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர். சோழர் குலத்தின் சின்னமான சீறும் புலியை அவர்கள் கோடியில் காணலாம். தஞ்சையை தலைநகராக கொண்டிருந்தனர் சோழர்கள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில், சோழர்கள் கொடி கட்டி பறந்தனர். அக்காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்கு கொண்டிருந்தது.

சோழர்களின் ஆட்சியில் தமிழ் நாட்டின் கலை, இலக்கியம், கோயில்கள் ஆகியன செழிப்படைந்தன. தஞ்சை பெரிய கோவில் இன்றுவரை இந்தியாவின் மிக உயரமான மற்றும் ஆக பெரிய கோயிலாக திகழ்கிறது.