தமிழ்நாட்டு மன்னர்கள் - சேர மன்னர்களின் வரலாறு

தமிழ்நாட்டு மன்னர்கள் - சேர மன்னர்களின் வரலாறு

2 mins read
fa22b2d0-25be-40c3-8029-e005b326f96d
சேரர் குலத்தின் சின்னம் வில் அம்பு -

பண்டைய தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று அரசுகளுள் ஒன்றாக விளங்கியது, தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாடு. அதனை ஆண்ட அரச குலத்தவர்கள் சேரர்கள் எனப்படுகிறார்கள்.

சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியை ஆண்டனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப் பகுதியும் ஆண்டனர்.

நீர் சூழ்ந்த கடலும் நிலமும் சேருமிடத்தைத் தமிழர் சேர்ப்பு என்றனர். சேர நாட்டின் பெரும்பகுதி சேர்ப்பு நிலம் என்பதினால் சேர குலத்தின் பெயர் தோன்றியது.

சேரர்களின் கொடியில் வில்லை காணலாம். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என கூறப்படுகிறது. இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர்.

சோழ, பாண்டிய குலத்தை போலவே, சேர குலத்தை குறித்து சங்க கால இலக்கியம் பெரிதளவில் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும், வரலாற்று பெருமை கொண்ட சேரகுலத்தார் 9ஆம் நூற்றாண்டில் புகழுயரம் அடைந்தனர்.

சேரர்கள் நகைகள் மற்றும் நறுமணப்பொருள்களின் வணிகத்திற்கு பெயர் போனவர்கள். வணிகத்தின்மூலம் பிற மேலை நாடுகளுடன் நல்லுறவுகள் வளர்த்து கொண்டு, வளத்தை பெருக்கி சிறப்பாக ஆட்சி புரிந்தனர்.

மூவேந்தர்களுக்கு இடையே போரும் பூசலும் அடிக்கடி எழுந்தாலும் தம் நாட்டினுள் கலை மற்றும் இலக்கியம் வளருவதற்கு இடமளித்தனர் சேரர்கள். இன்று சங்க காலத்து தமிழர்களின் வாழ்வை பற்றி தெரிந்துகொள்ள இவ்விலக்கிய வளங்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.