சிங்கப்பூரின் ஆக பழமையான கோயில், அதன் இருப்பிடமோ சைனாடவுன்

சிங்கப்பூரின் ஆக பழமையான கோயில், அதன் இருப்பிடமோ சைனாடவுன்

2 mins read
27346c60-7abd-4b16-885e-31002b201344
புதுப்பொலிவுடன் காட்சிதரும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பிப்ரவரி 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.15-8.20 மணிக்குள் ராஜகோபுரத்திற்கும் 8.45 மணிக்கு சன்னதிக்கும் குடமுழுக்கு நடைபெறும். படங்கள்: திமத்தி டேவிட் -

சிங்கப்பூரின் ஆக பழமையான இந்து கோவில் ஸ்ரீ மாரியம்மன் கோவில். 1827ல் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் முன்பு கிளிங் தெரு கோயில் என்று அழைக்கப்பட்டது. தென் இந்தியாவின் நாகப்பட்டினம் கடலூர் மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் இறைவழிபாட்டிற்கு இக்கோயிலை பிரபலமாக நாடி வந்தனர்.

சைனாடவுன் மையப் பகுதியில் இருக்கும் இந்த கோவில் பல தலைமுறையினரின் மனதில் சிறப்பிடம் கொண்டுள்ளது.

திரு நாராயண பிள்ளையின் உத்வேகத்தின் விளைவாக கட்டப்பட்டது இந்த கோயில். 1827ல் கட்டிய பொது மிகச் சிறிய கோவிலாகவும் சிறிய அம்மன் சிலையை கொண்டதாகவும் இருந்தது.

சுமார் 120 ஆண்டுகளுக்கு பிறகு, 1962ல் முற்றிலும் புதிதான கோயில் வளாகம் எழுப்பப்பட்டது. இந்திய கோவில் கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்ட இந்த கோயிலில், துல்லியமாக வடிவமைக்கப்பட்ட சிலைகள் சேர்க்கப்பட்டன. முன்பு எளிய வடிவில் கட்டப்பட்டிருந்த மைய கோபுரம் மெருகேற்றப்பட்டது.

சிங்கப்பூரின் ஆட்சிக்காலத்தின்போது துயருற்றிருந்த மக்களுக்கு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அடைக்கலம் அளித்ததாக கூறப்படுகின்றது.

இன்று இக்கோவில் சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்று. இந்து மத பண்பாடுகளுக்கும் கலாச்சாரதுக்கும் சிங்கப்பூரில் ஒரு மைய பகுதியாக இக்கோவில் திகழ்கிறது.

புதிய தலைமுறையினர் இந்து மக்களின் மத பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்வதோடு சிங்கப்பூரின் வரலாறு குறித்த அறிவையும் வளர்த்துக்கொள்ள இக்கோவில் வாய்ப்பளிக்கிறது.

அதுமட்டுமல்லாது, இக்கோயிலின் அழகை பல்லினத்தவர் நின்று ரசிப்பதை காணமுடியும். நம் பல இன சமுதாயத்தின் சிறப்புகளுக்கு ஒரு உதாரணமாய் அமைகிறது.