மாறிவரும் வேலைவாய்ப்பு சூழல்கள்

மாறிவரும் வேலைவாய்ப்பு சூழல்கள்

2 mins read
a5eed3e2-7e74-4184-8d3e-3b2c6c021c33
-

2000ஆம் ஆண்டுக்கு முன், இளநிலைப் பட்டக்கல்வி வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்தது. பொதுவாக பெரும் சிரமம் இன்றி வேலை கிட்டுவதுடன் விலைவாசியும் சமாளிக்க கூடியதாக இருந்தது. பட்டக்கல்வி இல்லாதவர்களுக்கும் ஓரளவு வேலைவாய்ப்புகள் இருந்தன.

இன்றோ, தொழில்நுட்பமும் அறிவியலும் கண்ட வளர்ச்சியினால் உலகமே மாறிவிட்டது. 2022ல் வெளிவந்த ஓர் அறிக்கை, சிங்கப்பூரின் தொழிலாளர்களில் 41.6 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பு சான்றிதழை கொண்டுள்ளனர்.

இதனால், அதிக போட்டித்தன்மை மிக்க சூழலை சிங்கப்பூர் கொண்டுள்ளது. உள்நாட்டு திறனாளர்களோடு மட்டுமின்றி மட்டுமல்லாது வெளிநாட்டு திறனாளர்கள் பல்லாயிரம் கணக்கானோருடனும் போட்டியிட வேண்டியுள்ளது.

பட்டப்படிப்பு பெறாதவர்கள் இன்னும் சிரமமான வாழ்க்கை முறையை எதிர்நோக்குகின்றனர். எதிர்காலத்தில், இந்நிலைமை மேலும் மோசமடையும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி மென்மேலும் பெருக, தானியக்கமும் மின்னிலக்கமும் பல துறைகளில் வேலை வாய்ப்புகளை குறைத்துள்ளன. இப்போதே, பல உணவகங்களில் இயந்திரங்கள் மக்களுக்கு சேவை வழங்கி வருகின்றன. இதுபோன்று, சேவை துறையில் பணிபுரியும் பலர் வேலைகளை இழக்கும் நிலையை எதிர்நோக்குகின்றனர்.

மருத்துவத்துறையிலும்கூட இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை மேற்பார்வையிடுவதற்கு மட்டும் மனிதர்கள் இருப்பது போதுமானது என்ற நிலை ஏற்படும் சாத்தியமும் ஆராயப்பட்டு வருகிறது.

எனவே, இச்சூழலால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய தொழிலாளர்கள் தம்மை மேம்படுத்திக் கொள்ள முயல வேண்டும். நிறுவனங்களும் தொழிலாளர்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தி ஆர்வம் காட்டும் பட்டப்படிப்பு இஇல்லாத தொழிலாளர்களுக்கு உதவ நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து சமூக முன்னேறுவதற்கு அடித்தள மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவது பொருளியலுக்கு அவசியம்.