"ஃபின்ஃப்ளுஎன்சர்ஸ்" (finfluencers) - உதவவும் செய்கின்றனர், குழப்பவும் செய்கின்றனர்.

"ஃபின்ஃப்ளுஎன்சர்ஸ்" (finfluencers) - உதவவும் செய்கின்றனர், குழப்பவும் செய்கின்றனர்.

2 mins read
c767a804-5f73-4670-81e1-f73b76ed0292
-

டிக்டாக் சமூக வலைத்தளத்தில் நிதியறிவு ஆலோசனை வழங்கி வருகின்றனர் சிலர். முதலீடு, வரவு செலவு, பிட்காயின் முதலியவற்றை விளக்கும் குறுங்காணொளிகளை இவர்கள் தயாரித்து வெளியிடுகின்றனர். இளம் பார்வையாளர்களுக்கும் நிதியறிவு சென்றடைய இது உதவுவதாக கருதி வருகின்றனர் இவர்கள்.

அதே சமயம், இது போன்ற "ஃபின்ஃப்ளுஎன்சர்ஸ்" எனப்படும் சமூக ஊடக பிரபலங்களில் பெரும்பாலானோர் முறையான நிதிக்கல்வியோ சான்றிதழோ பெற்றவர்கள் அல்ல. எனவே, மற்றவருக்கு நிதி முடிவுகளின் தொடர்பில் அறிவுரை கூறும் அளவிற்கு போதிய நிதியறிவும் பலரிடம் இருப்பதில்லை என்று டுடே செய்தி எச்சரிக்கிறது. மேலும், சில நிறுவனங்கள் தம்மை விளம்பரப்படுத்தும் நோக்குடன் ஃபின்ஃப்ளுஎன்சர்ஸுக்கு ஊதியம் தந்து தங்களது சேவைகளைக் குறித்து கூற கேட்டுக்கொள்கின்றன.

தம்முடைய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் ஃபின்ஃப்ளுஎன்சர்ஸ் பிரபலமாகி இருந்தாலும், போதுமான துறை அனுபவம் அவர்களிடம் இருப்பதில்லை. குறிப்பாக, உரிமம் இல்லாததால் இவர்களுடைய தனி நபர் அனுபவத்தை ஆலோசனையாக கருத கூடாது என்பது உரிமம் பெற்ற நிதி ஆலோசகர்களின் கருத்து.

ஃபின்ஃப்ளுஎன்சர்ஸ் பகிர்ந்துகொள்ளும் அனுபவங்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் இருப்பதில்லை. அதோடு, சுய லாபம் பெரும் ஈட்டுவதற்கென சமூக ஊடகத்தில் பதிவிடும் சிலரின் நோக்கங்களை பார்வையாளர்கள் அறிந்துகொள்வது எளிதல்ல. அனைவரும் பொறுப்பு துறப்புடன் தங்கள் காணொளிகளை தொடங்குவதில்லை. ஆகையால் பார்வையாளர்கள் அவர்களின் அனுபங்களை வேதவாக்காக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதே சமயம், சராசரி மனிதன் நிதி மேலாண்மை பற்றி தெரிந்துகொள்ள ஃபின்ஃப்ளுஎன்சர்ஸ் பெரிதும் உதவுவதாகவும், தம் வேலையை சுலபமாக்குவதாகவும் சிலர் டுடே செய்தியுடன் பகிர்ந்துகொண்டனர். மேலும், இதனால் நிதியறிவு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே உயர்ந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

அதிகம் டிக்டாக் பயன்படுத்தும் வழக்கம் உள்ள இன்றைய இளைஞர்கள் கவனமாய் இருப்பதே நல்லது. சமூக ஊடக பிரபலங்கள் கூறுவதை அப்படியே நம்பிவிடாமல், அதிக ஆராய்ச்சி மேற்கொண்டு அங்கீகரிக்க பட்ட தளங்களையும் உரிமம் பெற்றவர்களையும் நாடவேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்கள் கொண்டிருப்பதும் நல்லது.