இசையின் மூலம் சமூகத்திற்கு திருப்பி தர ஊக்குவிக்கும் இளையர் தொண்டூழிய இயக்கம்

இசையின் மூலம் சமூகத்திற்கு திருப்பி தர ஊக்குவிக்கும் இளையர் தொண்டூழிய இயக்கம்

2 mins read
60b86b9d-03d8-4b5e-96ce-09b230b9d2af
-

எலிஜா சௌ மற்றும் ஐவன் சியூ இருவரும் இசையின்மேல் கொண்டிருந்த பேரார்வத்தினால் சந்தித்தனர். 16 வயதாக இருக்கும்போது சந்தித்த இவர்கள், உரையாடிய பிறகு இருவருக்கும் ஒருமித்த எண்ணம் இருப்பதை அறிந்துகொண்டனர். இசையுடன்கூடிய தொண்டூழியம் புரிவதே அவ்வெண்ணமாகும்.

இரு இளையர்களும் சேர்ந்து இசை நிகழ்ச்சி படைக்க அதீத ஆசை கொண்டிருந்தனர். பல தொண்டூழிய அமைப்புகளுக்கு பெரிய அளவில் இசை கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வளங்கள் இல்லை என்பதை அவர்கள் கவனித்திருந்தனர்.

"தி ரெசோநன்ஸ் ப்ராஜெக்ட்" (The Resonance Project) என்னும் ஒரு தன்முனைப்பு நிகழ்ச்சியில் இவர்களின் எண்ணங்கள் சங்கமித்தன. ஒவ்வொரு வாரமும் தொண்டூழியர்கள் தீவு முழுதும் உள்ள பயனாளி நிலையங்களுக்குச் செல்கின்றனர். அங்குள்ள பிள்ளைகளுக்கும் பெரியோருக்கும் கிட்டார் மற்றும் உகுலேலே இசைக்கருவிகளை எப்படி மீட்டுவது என்பதை கற்றுக்கொடுத்தனர்.

2021ல் திட்டமிட தொடங்கிய எலிஜாவும் ஐவனும், தம்முடன் இணைய தொண்டூழியர்களைத் தேடிக்கொண்டிருந்தார். இவர்களுக்கு முதலில் கைகொடுத்த தொண்டூழியர்கள் இருவரின் பள்ளி நண்பர்களாக இருந்தனர்.

ஒரு மாதத்திற்குள்ளாகவே மூன்று அமைப்புகள் இவர்களிடம் நிகழ்ச்சி படைக்க ஆர்வத்தை தெரிவித்திருந்தனர். "யூதோபியா" என்னும் சமூக வலைத்தள நிறுவனத்துடன் தம் பயணத்தை பகிர்ந்துகொண்டனர் இளைஞர்கள்.

"தலைமுறைகளுக்கு இடையிலான கற்றலையும் துடிப்புமிக்க மூப்படைதலையும் முதியோரிடம் வலியுறுத்துகிறோம். இசையை உருவாக்கவோ ரசிக்கோ எளிதில் வாய்ப்பு பெறாத சிறுவர்களுக்கு இசைக்கருவிகள் பற்றி கற்பிக்கிறோம்" என்று தெரிவித்தனர்.

இசையின் மூலம் மற்ற மனிதர்களுடன் எளிதாக இணக்கம் ஏற்படுத்தலாம் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆசைப்படுகிறார்கள் எலிஜா மற்றும் ஐவன். அதோடு, தொண்டூழியர்களின் எண்ணிக்கையையும் பயனடையும் சிறுவர்கள் மற்றும் பெரியோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நோக்கம் கொண்டுள்ளனர்.