உலகமயமாதல் பற்றி இளைஞர்கள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்

உலகமயமாதல் பற்றி இளைஞர்கள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்

2 mins read
0009615e-dd20-4f71-b8b0-d212690255b5
-

உலகமயமாதல் என்ற சொல்லை இக்காலத்தில் எங்கும் காண்கிறோம். சிங்கப்பூர் தேசிய இளைஞர் மன்றம் இளைஞர்களுக்கு இதை பற்றிய அறிவை வளர்க்க ஒரு வலையொளியை தொடங்கியுள்ளது.

இந்த வலையொளி உலகமயமாதல் என்ன என்பதையும் உலகமயமாதலால் சிங்கப்பூர் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் ஆராய்கிறது.

உலகமயமாதல் பல நன்மைகளை மனிதர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. இருப்பினும், அது சில பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பதும் உண்மை. நாடுகளுக்கு இடையிலான சார்பு நிலை இன்று ஒரு சவாலாக உருமாறியுள்ளது.

கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் இதன் விளைவுகளை கண்கூடாக பார்த்தோம். எல்லைகளை மூடிய நாடுகள் தம் மக்களுக்கு தேவையான பல பொருட்களில் பற்றாக்குறையை எதிர்நோக்கின. இதனால், கிருமித்தொற்று அச்சுறுத்தலுடன், பொருளியல் வாழ்வாதாரமும் பாதிப்படைந்தது.

இந்நிலையில், மற்ற நாடுகளை சாராமல் வாழ்வது சாத்தியமில்லை எனும் நிலைமை உள்ளது. குறிப்பாக, பல வளங்கள் இல்லாத சிங்கப்பூருக்கு இது நினைத்து பார்க்க முடியாது ஒரு நிலை. பல நாடுகளிலிருந்து பலதரப்பட்ட பொருட்களை மக்களுக்காக இறக்குமதி செய்கிறது சிங்கப்பூர். ஆகவே, சிங்கப்பூரும் அதன் இளைஞர்களும் உலகமயமாதல் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என நிறுவன தலைவர், திரு பரக் வலியுறுத்துகிறார்.

பிறருடன் வளங்களையும் சிந்தனைகளையும் சுலபமாக பகிர்ந்துகொள்ளும் வசதிகள் உள்ள இன்றைய உலகில், இளைஞர்கள் உலகமயமாதலை கண்டு அஞ்சாமல் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயல வேண்டும்.

பெருகிவரும் போட்டித்தன்மைமிக்க சூழலை கண்டு துவண்டு விடாமல் அதனை ஊக்கமாக பார்த்து அறிவின் ஆழத்தை அதிகரிக்க முயல ஆலோசிக்கிறார்கள் நிபுணர்கள்.