மூழ்காமல் விழிப்போம் மோசடிகளை ஒழிப்போம்

மூழ்காமல் விழிப்போம் மோசடிகளை ஒழிப்போம்

1 mins read
76f84eb2-5fbd-4512-b56e-e167d40d1818
-

இணைய மோசடிக் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட 'ஸ்கேமினார்' கருத்தரங்கில், ஐந்தாண்டுகளில் இணைய மோசடிப் புகார்கள் நான்கு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் சுன் ஷூவெலிங், 60,000 இணைய மோசடிச் சம்பவங்களில் ஒரு பில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையைச் சிங்கப்பூர் மக்கள் இழந்துள்ளதாக குறிப்பிட்டார்.

நேரடியாக நடைபெறும் குற்றங்கள் குறைவாக இருக்கும் நிலையில், இணைய மோசடிகள் தான் தற்போதைய முக்கிய பிரச்சினை என்று அவர் தெரிவித்தார்.

"நாம் சட்டத்தை மட்டுமே நம்பி இருக்க இயலாது. இணைய மோசடிகளுக்கு எதிரான மிக சிறந்த தற்காப்பு முறையானது கவனமும் விழிப்புணர்வும் உடையோராக நாம் விளங்குவதே," என்றார் அமைச்சர்.

நிகழ்வில் இடம்பெற்ற இரு குழு கலந்துரையாடல்கள் இணைய மோசடி குறித்த தவறான புரிதல்களை மமாற்ற முயன்றன. முதியவர்கள் பெரும்பாலும் இணைய மோசடிக்கு ஆளாகின்றனர் என்றில்லை, அனைத்து வயதினரும் பாதிப்படைய கூடும் என்று இக்கலந்துரையாடல்களில் பேசப்பட்டது. 20 முதல் 39 வயதுக்கு உட்பட்டோர் வேலை மோசடி மற்றும் இணையக்கடை மோசடிகளுக்கு ஆளாவதையும் அவை சுட்டிக்காட்டின.

நம்மையும் பிறரையும் காத்துக்கொள்ள மூன்று முக்கிய வழிமுறைகளைக் குறிக்கும் 'ACT' இக்கலந்துரையாடல்களில் விளக்கப்பட்டது. இதன்படி, தனிப்பட்ட இணைய கணக்குகளில் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துக்கொள்வது முதலில் அவசியம். அடுத்து, இணைய மோசடிக்கான அறிகுறிகளைக் கூர்ந்து, நிதானித்துக் கவனிக்கவேண்டும்.

கடைசியாக, இணைய மோசடி ஏற்பட்டால், வங்கியிடமோ காவல்துறையினரிடம் உடனடியாகப் புகார் அளிப்பது அவசியம்.