தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிநவீன பொங்கோல் வட்டார நூலகம்

2 mins read
875e92cd-dc24-4e3b-8f10-c84eb767a1bb
- The Straits Times

நூல் வாசிக்கும் பழக்கத்தை சுவாரசியமாக்கி உள்ளது புது பொங்கோல் வட்டார நூலகம். நவீன தொழில்நுட்பங்களை இந்த ஐந்து மாடி நூலகம் கொண்டுள்ளது. சிறுவர்களைக் கவரும் அம்சங்கள், உடற்குறை உள்ளோருக்கான வசதிகள் ஆகியவை இந்நூலகத்தில் உள்ளன.

‘ஒன் பொங்கோல்’ நிலையத்தில் இந்த நூலகம் அமைந்துள்ளது. அதன் முதல் இரண்டு மாடிகள் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான பல கேளிக்கைப் பகுதிகளை நூலகம் கொண்டுள்ளது. ‘ஸ்டோரீஸ் கம் அலைவ்’ என்ற அறையில் சிறுவர்கள் கதைகளைப் படங்களாக கண்முன் காணலாம். இந்த அறையில் தொடுதிரைகளும் உள்ளன. 

இந்த இரு மாடிகளில் எல்லா வயதுச் சிறுவர்களுக்கும் ஏற்ற பகுதிகள் இருக்கின்றன. ‘உலகமும் நாமும்’ எனும் தொகுப்பு, சிறுவர்கள் நடவடிக்கைப் பகுதி போன்றவை உள்ளன.

“சிறுவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க இந்நூலகம் உதவுகிறது. மற்ற நூலகங்களில் இதுபோன்ற வசதிகள் இல்லை. சிறுவர்களுக்கு மிக பிடித்த வகையில் அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் கற்றலை இவ்வசதிகள் எளிமையாக்கி உள்ளன,” என்றார் பொங்கோல் வட்டார நூலகத்துக்கு வழக்கமாக வரும் ஒரு வாசகர். 

உடற்குறை உள்ளோருக்கும் பல வசதிகள் இந்நூலகத்தில் உள்ளன. அவர்கள் சாதாரண இரவல் இயந்திரங்களை எளிதில் பயன்படுத்த முடியாது. சக்கரை நாற்காலி பயன்படுத்துவோர், கண் தெரியாதோர், நூல்களைக் கையிலே வைத்துக்கொண்டே ஒரு பாதை வழி நடக்கலாம். அப்படி நடந்தாலே அவர்களின் புத்தகங்கள் இயந்திரத்தில் பதிவாகிவிடும். இவ்வாறு அவர்களுக்கு வசதியான இரவல் நிலையங்களை இந்நூலகம் கொண்டுள்ளது. 

அத்துடன், ‘கால்ம் போட்ஸ்’ எனும் சிறப்பு இடங்கள் நூலகத்தில் உண்டு. இவை, குறிப்பிட்ட உடற்குறையுள்ளோரை சாந்தபடுத்த உதவுகிறது. அவர்கள் இந்த இடங்களில் அமைதியாக நூல்களை வாசிக்கலாம். 

தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும் இக்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, மக்களின் கவனத்தை தக்க வைப்பது சிரமம் ஆகியுள்ளது. செய்தியை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிக்க தொழில்நுட்பம் மிகவும் உதவும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார். அவர், பொங்கோல் வட்டார நூலகத்தை இவ்வாண்டு மக்களுக்காக திறந்து வைத்தார். 

“சமூக அமைப்புகளாக நூலகங்கள் செயல்படுகின்றன. அவை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மக்களுக்கு சேவையாற்ற தொடர்ந்து முன்வருகின்றன. இந்நூலகம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதுபோன்ற நவீன நூலகங்களை சிங்கப்பூரில் பல இடங்களிலும் இனி காண வாய்ப்பு உண்டு,” என்று திரு வோங் கூறினார்.