இந்தியாவில் ஆக நீளமான ஆற்றுவழி சொகுசுக் கப்பல் பயணம்
1 mins read
உலகின் ஆக நீளமான 'எம்வி கங்கா விலாஸ்' ஆற்றுவழி சொகுசுக் கப்பல் பயண சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வழியாகத் தொடங்கிவைத்தார். படம்: பிடிஐ -
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் தொடங்கும் இந்த 51 நாள், 3,200 கிலோமீட்டர் சொகுசுக் கப்பல் பயணம், பங்ளாதேஷ் வழியாகச் சென்று, அசாம் மாநிலம், திப்ருகரில் முடிவடையும். படம்: பிடிஐ -
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் சொகுசுக் கப்பல் இதுதான். படம்: பிடிஐ -
62 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பல், இந்திய, அனைத்துலக வடிவமைப்பு கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. படம்: பிடிஐ -
மூன்று தளங்களுடன் கூடிய இக்கப்பலில் 18 'சூட்' அறைகள் உள்ளன. மொத்தம் 36 பேர் பயணம் செய்யலாம். அவர்களுடன், கப்பல் பணியாளர்கள் 40 பேருக்கும் தங்குமிட வசதியுண்டு. படம்: பிடிஐ -
'எம்வி கங்கா விலாஸ்' கப்பலில் முதல் பயணத்தை மேற்கொள்ளும் சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணிகள் 32 பேரும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். படம்: பிடிஐ -
நாளொன்றுக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை என்ற கணக்கில், 51 நாள் பயணத்திற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகலாம் என்று சொகுசுக் கப்பலின் இயக்குநர் ராஜ் சிங் தெரிவித்தார். படம்: பிடிஐ -
இந்தியாவின் செழுமையான மரபை எடுத்துக்காட்டும் வகையில் வரலாற்று, கலாசார, சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இக்கப்பல் நின்று செல்லும். படம்: பிடிஐ -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

