அச்சம் இவர்களுக்குத் துச்சம்!
1 mins read
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் 'கேஎல் டவர் இன்டர்நேஷனல் ஜம்ப் மலேசியா' எனும் உயரத்திலிருந்து கீழே குதிக்கும் சாகச நிகழ்வு இன்று பிப்ரவரி 3ஆம் தேதி இடம்பெற்றது. மலேசியாவின் புகழ்பெற்ற கோலாலம்பூர் கோபுரத்தின் உச்சியில், தரையிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திறந்தவெளி மேல்தளத்தில் இருந்து சாகசக்காரர்கள் கீழே குதித்தனர். உலகம் முழுவதுமிருந்தும் பல 'அஞ்சான்'களை இந்த சாகச நிகழ்வு ஈர்த்து வருகிறது. படங்கள்: ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

