ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை
1 mins read
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றியபோது கந்தசாமி சேனாபதி கோயில் நகைகளை சட்டவிரோதமாக அடமானம் வைத்துள்ளார். நம்பிக்கையின் அடிப்படையில் கிட்டத்தட்ட 1 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள கோயில் நகைகள் சேனாபதியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த நகைகளை பலமுறை அடமானம் வைத்து கிட்டத்தட்ட 2.3 மில்லியன் வெள்ளியைக் கையகப்படுத்தினார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், திமத்தி டேவிட்
-
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

