உலகம் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் வாணவேடிக்கைகளும்
1 mins read
சிங்கப்பூரில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது டிசம்பர் 31ஆம் தேதி மரினா பேயில் இடம்பெற்ற வாணவேடிக்கைகள். - படம்: ராய்ட்டர்ஸ்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது ஜனவரி 1ஆம் தேதி பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களுக்கு மேலே இடம்பெற்ற வாணவேடிக்கைகள். - படம்: ராய்ட்டர்ஸ்
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் டிசம்பர் 31ஆம் தேதி ஹோட்டல் இந்தோனீசியாவுக்கு மேலே இடம்பெற்ற வாணவேடிக்கைகள். - படம்: ராய்ட்டர்ஸ்
தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது ஜனவரி 1ஆம் தேதி இடம்பெற்ற வாணவேடிக்கைகள். - படம்: ராய்ட்டர்ஸ்
வியட்னாம் தலைநகர் ஹனோயில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு வானை மிரளவைத்த வாணவேடிக்கைகள். - படம்: இபிஏ
இந்தியாவின் நிதி மையமான மும்பையில் டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் திளைக்கும் மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது ஹோட்டல் ஒன்றில் விடப்பட்ட பலூன்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் டிசம்பர் 28ஆம் தேதி தம் முகத்துக்கு சாயம் பூசி படத்துக்குக் காட்சிதரும் மாணவி ஒருவர். - படம்: ஏஎஃப்பி
புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபடும் பக்தர்கள். - படம்: இபிஏ
மெக்சிகோவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜனவரி 1ஆம் தேதி இரவு வானை ஒளிமயமாக்கிய வாணவேடிக்கைகள். - படம்: இபிஏ
துபாயில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது ஜனவரி 1ஆம் தேதி புர்ஜ் கலிஃபா கோபுரத்தைச் சுற்றி வெடித்த வாணங்கள். - படம்: ஏஎஃப்பி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

