தீமிதியை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழா
1 mins read
ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ திரெளபதி அம்மன் கரக
ஊர்வலத்திற்குமுன் ஸ்ரீ மாரியம்மன் சந்நிதியில் வழிபாட்டுச் சடங்குகள் நடைபெறுகின்றன. (படங்கள்: த.கவி) - படம்: த.கவி
கொடியேற்ற விழாவின்போது கரகத்திற்கு மாவிலை சுற்றும் ஆலயத் தொண்டூழியர்கள். - படம்: த.கவி
பல்வண்ண மலர்மாலைகளாலும் அலங்காரத்தாலும் மின்னும் ஸ்ரீ திரெளபதி அம்மனின் திருவுருவம். - படம்: த.கவி
கரகத்திற்கு மல்லிகை மலர் கோக்கும் ஆலயத் தொண்டூழியர். - படம்: த.கவி
மா இலைகள் மற்றும் பூக்களால் செய்து முடிக்கப்பட்ட கரகம். - படம்: த.கவி
ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, கரகத்தைத் தலையில் சுமந்து ஆடுகிறார். - படம்: த.கவி
ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, கரகத்தைச் சுமந்துகொண்டு ஆலயத்தை வலம் வருகிறார். - படம்: த.கவி
ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, கரகத்தைச் சுமந்தபடி ஆலயத்திலிருந்து வெளியேறுகிறார். - படம்: த.கவி
ஆலயம் வலம் வந்த கரகம், ஸ்ரீ திரெளபதி அம்மன்
சந்நிதியை மீண்டும் அடைந்தது. - படம்: த.கவி
ஆஞ்சநேயர் உருவம் பொறித்த கொடி. - படம்: த.கவி
கொடியேற்ற வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ திரெளபதி, ஸ்ரீ அர்ச்சுனர், ஸ்ரீ வீரபத்திரர் ஆகியோரின் திருவுருவங்களைப் பல்லக்குகளில் தாங்கும் பக்தகோடிகள். - படம்: த.கவி
கொடியேற்றத்திற்காக மும்முரமாக நடைபெறும் ஆயத்தப் பணிகள். - படம்: த.கவி
அக்டோபர் 20ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான தீமிதித் திருநாளை ஒட்டிய திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றம் அமைந்தது. - படம்: த.கவி
ஸ்ரீ திரெளபதி அம்மனின் உற்சவத் திருவுருவத்தை சந்நிதிக்குத் திரும்பக் கொண்டுசெல்லும் ஆலயத்தினர். - படம்: த.கவி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted