ஸ்ரீ சிவன் கோயில் குடமுழுக்குப் பெருவிழா 2025
1 mins read
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை 8.30 மணி அளவில் ராஜகோபுர கலசத்தின்மீது நன்னீர் ஊற்றப்படுகிறது. - படம்: த.கவி
கடப்புறப்பாட்டின்போது தீபாராதனை காட்டப்படுகிறது. - படம்: த.கவி
சிவாச்சாரியர்கள் ஆலயத்திற்குள் நன்னீர்க்குடங்களை ஏந்திச் செல்கின்றனர். குடங்களுக்கு முன் பூசணிக்காய் ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. - படம்: த.கவி
வண்ணக் குடைகளின்கீழ், நன்னீர்க் குடங்கள். - படம்: த.கவி
ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தர சிவாச்சாரியார் அலங்கரிக்கப்பட்ட கடத்தைச் சுமந்து மூலவர் சந்நிதிக்குச் செல்கிறார். - படம்: த.கவி
புதுப்பொலிவுடன் மிளிரும் ஆலயச் சந்நிதியின் மூலவர் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. - படம்: த.கவி
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, உள்துறை அமைச்சர் கா சண்முகம் (நடுவில்), டாக்டர் டி சந்துருவுடன் உரையாடுகிறார். திரு சண்முகத்துடன் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன் (வலது). - படம்: த.கவி
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, உள்துறை அமைச்சர் கா சண்முகம் (இடது) பக்தர்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறார். - படம்: த.கவி
(வலமிருந்து) ஸ்ரீ சிவன் கோயில் நிர்வாகத் தலைவர் யோகநாதன் அம்மையப்பன், இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் க. செங்குட்டுவன், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, உள்துறை அமைச்சர் கா சண்முகம், இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன், வாரிய துணைத்தலைவர் சுசிலா கணேசன். திருக்குடமுழுக்கின் நினைவுச்சின்னம் வெளியிடப்படுகிறது. - படம்: த.கவி
குடமுழுக்கு மலருடன் (இடமிருந்து) இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன், வாரிய துணைத்தலைவர் சுசிலா கணேசன், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, உள்துறை அமைச்சர் கா சண்முகம். - படம்: த.கவி
பக்தர்கள்மீது குருக்கள் நன்னீர் தெளிக்கிறார். - படம்: த.கவி
ஆலயம் செல்லக் காத்திருக்கும் பக்தகோடிகள். குடமுழுக்கை நேரில் காண 20,000க்கும் அதிமானோர் திரண்டதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது. - படம்: த.கவி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted