சவால்களை எதிர்கொள்ளும் இந்தியர்களுக்குத் தனிப்பட்ட ஆதரவு அவசியம்: அமைச்சர் ஜனிலின் வலியுறுத்து
1 mins read
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹமீது ரசாக், விக்ரம் நாயர் ஆகியோருடன் மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி - படம்: த.கவி
நற்பணி பேரவைத் தலைவர் ரவீந்திரன், அவையினர் முன் பேசுகிறார். - படம்: த.கவி
கலந்துரையாடலின் முன்வரிசையில் சிங்கப்பூரிலுள்ள இந்தியச் சமூகத் தலைவர்கள். - படம்: த.கவி
சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களின் அடித்தளத் தலைவர்கள், தொண்டூழியர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் என ஏறத்தாழ 200 பேர் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். - படம்: த.கவி
ஆண்டுதோறும் நடைபெறும் இக்கலந்துரையாடலில் இவ்வாண்டு செயற்கை நுண்ணறிவு, வேலைவாய்ப்பு சவால்கள், சமூக ஒருங்கிணைப்பு, சுகாதாரம், இருமொழிக் கல்வி, முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் கலந்துரையாடப்பட்டன. - படம்: த.கவி
இந்தியச் சமூகம் ஒட்டுமொத்தமாக முன்னேறியிருந்தாலும், இன்னமும் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்குக் கைகொடுத்து, அவர்களை ஆதரிப்பது அவசியம் எனக் கூறப்பட்டது. -
படம்: த.கவி
எந்தவோர் அமைப்பும் தனித்து நின்று சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. எனவே, இந்திய அமைப்புகள் ஒன்றிணைந்து பங்காளித்துவங்களை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்றும் பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். - படம்: த.கவி
மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பதும், வீடு வீடாகச் சென்று பேசுவதும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் சிறந்த அணுகுமுறைகளாக அமையும் என்ற கருத்தும் இடம்பெற்றது. - படம்: த.கவி
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப மாற்றங்களைச் சமாளிப்பதற்கு, மக்கள் மீள்திறன் மற்றும் தகவமைப்புத் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் தலைவர்கள் கூறினர். - படம் த.கவி
தமிழ் போன்ற தாய்மொழிகளின் உயிராற்றலைக் கட்டிக்காப்பது, தேச ஒருமைப்பாட்டிற்கு மிகவும் அவசியம். இதை ஊக்குவிப்பதில் சமூகத்தின் பங்கு இன்றியமையாதது என்பதற்கு மாற்றுக் கருத்து தெரிவிக்கப்படவில்லை. - படம்: த.கவி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted