தீபாவளி 2025: கண்களைப் புலரவைக்கும் மலர்வட்டங்கள்
1 mins read
சென்சரிஸ்கேப்பின் கட்டடக்கலையை மையமாகக் கொண்டு, சிங்கப்பூர்க் கலைஞர் கிறிஸ் சாய் அந்த மலர்வட்டத்தையும், ‘வான விளக்கு’ என அழைக்கப்படும் பெரிய கூண்டுவிளக்குகளையும் வடிவமைத்துள்ளார். - படம்: த.கவி
பாரம்பரிய வடஇந்திய விளக்கு வடிமான ஆகாஷ் கண்டிலை அடிப்படையாகக் கொண்டு ஆறு உருளை வடிவ விளக்குகளை சென்சரிஸ்கேப் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளன. - படம்: த.கவி
அலைகள், கிளிஞ்சல்கள், மயில் இறகுகள் ஆகியவற்றின் ரேகைகளைக் கொண்ட மண்டல வடிவங்கள் இந்த விளக்குகளின் மீது பொறிக்கப்பட்டுள்ளன. - படம்: த.கவி
மண்டலா, ரங்கோலி ஆகியவற்றின் பாணிகளை இணைக்கும் 7.5 மீட்டர் வடிவம். - படம்: த.கவி
மலர்வட்டத்தின் நுட்பமான, சமச்சீரான வேலைப்பாட்டிற்கு இரவில் வெளிச்சம் சேர்க்கப்படுகிறது. - படம்: த.கவி
அழகிற்கும் புதுப்பிப்புக்கும் சின்னமாகத் திகழும் மயிலின் தோற்ற அம்சங்கள், 12 பக்க விளக்கில் சேர்கக்ப்பட்டுள்ளன. - படம்: த.கவி
இரவில் ஒளிரும் ஊதா நிற விளக்குளில் தென்படும் நுட்மான வடிவங்கள் - படம்: த.கவி
சுவற்றில் பொருத்தப்பட்டுள்ள எட்டு வண்ண மண்டலோவியங்களை வருகையாளர்கள் காணலாம். - படம்: த.கவி
சமநிலை, இணைப்புகள், தேடல் ஆகியவற்றை இந்த மண்டலங்கள் பிரதிபலிக்கின்றன. - படம்: த.கவி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

