உலகமெங்கும் 2024ஆம் ஆண்டு வாணவேடிக்கை, திருவிழாக்கள், ஆடல் பாடலுடன் பிரம்மாண்டமாக வரவேற்கப்பட்டது.
1 mins read
சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மெரினா விரிகுடாவில் பட்டாசுகள் வெடித்தன. படம்: ரெளட்டர், ஏ.எஃப்.பி -
கென்யாவில் அமைந்துள்ள காகாமெகா நகரில் ஆயிரகணக்கான மக்கள் மலின்யா விளையாட்டு அரங்கத்தில் கூடி காளை மாட்டுச்சண்டையுடன் புத்தாண்டை தொடங்கினர். -
இந்தோனீசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் பேரங்காடியின் கூரைக்கு மேல் வண்ணமிக்க வாணவேடிக்கைக் காட்சியை மக்கள் கண்டுகளித்தனர். -
கங்கை, யமுனை ஆறுகள் இணையும் சங்கத்தின் அருகில் உள்ள கோவிலில் புத்தாண்டு நாளை கொண்டாடுவதற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. -
பாடகர் மிக் ஜாகரை பிரதிபலிக்கும் ஒரு முகமூடியை அணிந்துகொண்டு இக்கலைஞர் லண்டனின் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்றார். -
டில்பர்க்கில் உள்ள பியூஷாவனில் பார்வையாளர்கள் வாணவேடிக்கைகளை ரசிக்கிறார்கள். -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

